ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், LPG சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் மாற்றுகிறது. அந்த வகையில் LPG கேஸ் சிலிண்டரின் 56 ரூபாய் உயர்வு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் டிசம்பர் மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களை தொடர்ந்து இந்த மாதமும் LPG கேஸ் சிலிண்டரின் (LPG Gas Cylinder) விலை மாறவில்லை, ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வணிக சிலிண்டர்கள் விலை  உயர்ந்தன. டிசம்பர் மாதத்தில், எண்ணெய் நிறுவனங்கள் (HPCL, BPCL, IOC) 14.2 கிலோ சிலிண்டரின் விலையை மானியமின்றி எரிவாயு மாறிலி இல்லாமல் 594 ரூபாயாக வைத்திருக்கின்றன. மற்ற நகரங்களிலும் உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் (LPG Cylinder Price) எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், வணிக சிலிண்டர்களின் விலை ரூ.56 வரை உயர்த்தப்பட்டுள்ளது.


19 கிலோ LPG சிலிண்டர் விலை உயர்வு


- நாட்டின் தலைநகரான டெல்லியில் 19 கிலோ LPG கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,241 லிருந்து ரூ.1,296 ஆக உயர்ந்துள்ளது. 19 கிலோ LPG சிலிண்டர் ரூ.55 ஆக விலை உயர்ந்தது. 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ .594 ஆக உள்ளது.


ALSO READ | இன்று முதல் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன? - இதோ முழு விவரம்..!


- கொல்கத்தாவில், 19 கிலோ LPG கேஸ் சிலிண்டரின் விலை ரூ .1,296 லிருந்து ரூ .1,351.50 ஆக உயர்ந்துள்ளது. விலை சிலிண்டருக்கு ரூ .55 அதிகரித்துள்ளது. இங்கு உள்நாட்டு எரிவாயுவின் விலை 620.50 ரூபாய் ஆக உள்ளது.


- மும்பையில், 19 கிலோ LPG கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,189.50 லிருந்து ரூ .1,244 ஆக உயர்ந்துள்ளது. இங்குள்ள விலை சிலிண்டருக்கு ரூ .55 அதிகரித்துள்ளது. 14.2 கிலோ LPG சிலிண்டரின் விலை ரூ .594 ஆக உள்ளது.


- சென்னையில், 19 கிலோ LPG கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. இங்கு சிலிண்டருக்கு விலை ரூ .56 அதிகரித்துள்ளது. இங்கே 14.2 கிலோ LPG சிலிண்டரின் விலை ரூ.610 ஆக உள்ளது.