2022-ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள்: இவர்களுக்கு இந்த ஆண்டு ராஜ யோகம்!!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
Horoscope 2022: 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. 2021 பல நல்ல மற்றும் கெட்ட நினைவுகளை விட்டுச் சென்றுள்ளது. இப்போது 2022 ஆம் ஆண்டின் மீது அதிக நம்பிக்கை கொண்டு மக்கள் காத்திருக்கிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ஆண்டு இவர்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தால், 2022 ஆம் ஆண்டு இவர்கள் மீது மிக கனிவாக இருப்பதோடு பல நல்ல பலங்களைக் கொடுக்கும். சில ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வாழ்க்கையை மாற்றக்கூடியதாக இருக்கும், அவர்களது நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
2022 ஆம் ஆண்டுக்கான அதிர்ஷ்ட ராசிகள்
ரிஷபம் (Taurus): ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக இருக்கும். 2022 பிரகாசமாக இருப்பதோடு, பெரிய அந்தஸ்தையும் கொடுக்கும். வருமானம் பெருகும். செல்வமும் பெருகும். பொருளாதார ஸ்திரத்தன்மை உங்களை புதிய முயற்சிகளை எடுக்கத் தூண்டும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வருடம் முழுவதும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள்.
ALSO READ | 2022 இல் வேலை, தொழிலில் வெற்றி கொடி நாட்ட உள்ள ராசிகள் இவர்களே
சிம்மம் (Leo): 2022 புத்தாண்டு சிம்ம (Leo) ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். இந்த வாய்ப்புகளை தவறவிடாதீர்கள், ஏனெனில் அவை எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய பலன்களைத் தரும்.
விருச்சிகம் (Scorpio): விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022-ம் ஆண்டு பல வரங்களைக் கொண்டு வருகிறது. இந்த வருடம் உங்களின் பல ஆசைகள் நிறைவேறும். பொதுவாக, எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
துலாம் (Libra): துலா ராசிக்காரர்களுக்கு 2022-ம் ஆண்டு சிறப்பான வெற்றியைத் தரும். தொழில்-பண வகையில் அதிக லாபம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சிகரமான பொழுதை செலவழிப்பீர்கள். இந்த ஆண்டு உங்க்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு அதிக முன்னேற்றத்தை அளிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த வருடம் மகர ராசிக்காரகளுக்கு பெயர், பணம் இரண்டும் அதிகமாக கிடைக்கும்.
கும்பம் (Aquarius): 2022 ஆம் ஆண்டு கும்ப (Aquarius) ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும் ஆண்டாக இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றாகத் தீர்ந்து போகும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாழ்க்கை மீண்டும் சரியான பாதையில் திரும்பும். வாழ்க்கையில் அன்பின் ஆதிக்கம் இருக்கும். திருமண வயதில் இருக்கும் கும்ப ராசிக்காரகளுக்கு திருமணம் நடக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்வல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | 2022-ல் அமையவுள்ளன அட்டகாசமான 4 யோகங்கள்: இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR