Mercury Transit: மகரத்தில் புதன் சஞ்சாரம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கும்

பூக்கவிருக்கும் புத்தாண்டில் புதனால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் யார்? பலனடையும் ராசி எது?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2021, 06:12 AM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி கூடும்
  • மீன ராசிக்கு கல்யாணம் நடைபெறும்
  • மேஷராசிக்காரருக்கு பணி உயர்வு கிடைக்கும்
Mercury Transit: மகரத்தில் புதன் சஞ்சாரம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கும் title=

புதுடெல்லி: தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்ற புதன் மக்கள் மீது அருள் பொழிபவர். மகர ராசியில் மார்ச் 6ம் தேதி வரை இருக்கப்போகும் புதனின் அருள்மழையால் நனையப்போகும் ராசிகள் இவை தான்...  பூக்கவிருக்கும் புத்தாண்டில் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் யார்? பலனடையும் ராசி எது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், புதனின் பெயர்ச்சி காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம். உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் அதிகரிக்கும். தேர்தல் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க நினைத்தால், அதற்கும் இந்த நேரம் நன்றாகவே இருக்கும்.

ரிஷபம்: இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் குழந்தைகளின் கல்வி, திருமணம் தொடர்பான பொறுப்புகளில் இருந்து விடுபடலாம். மனதில் மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இந்த மாறுதல் காலம் மங்களகரமானதாக இருக்கும்.

மிதுனம்: புதன் சஞ்சாரத்தின் போது உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக சதி நடக்கலாம். மருந்து எதிர்வினைகள், ஒவ்வாமை அல்லது தோல் நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில், உங்கள் பணித் திட்டங்களை ரகசியமாக வைத்து, அமைதியாக வேலை செய்யுங்கள்.

கடகம்: திருமணம் தொடர்பான விஷயம் உறுதி செய்யப்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு  புத்தாண்டில் டெண்டர் பெறுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன. கூட்டு முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். யாருக்கும் அதிகமாக கடன் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். கடன் கொடுத்தால் நிதி இழப்பு ஏற்படலாம்.

சிம்மம்: புதனின் இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு சவாலாக இருக்கும். உங்களை அறிந்தவர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். குடும்ப உறுப்பினர் நோயை சந்திக்க நேரிடும். இதனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதன் ஒவ்வொரு அம்சத்தையும் கவனமாக சிந்தியுங்கள்.

ALSO READ | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகளுக்கு இந்த புத்தாண்டு ஜாக்பாட்

கன்னி: புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் காதல் திருமணம் செய்ய விரும்பினால், மகர ராசியில் புதன் இருக்கும் இந்தக் காலத்தில் அது நிறைவேற வாய்ப்புள்ளது. உங்களுடைய வேலைகளில் குடும்பப் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். சில புதிய வேலைகளையும் தொடங்கலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு நல்ல நேரம் இது.

துலாம்: புத்தாண்டில் நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அரசுத் துறைகளில் நிலுவையில் இருந்த உங்களின் பணி முடியும். வாகனம், வீடு வாங்கும் கனவு நிறைவேறும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். சுபச் செய்திகளுக்கு (Good News in New Year) மத்தியில் பெற்றோரின் உடல் நலனில் அக்கறையும் காட்ட வேண்டியிருக்கும்.

ALSO READ | இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது

விருச்சிகம்: 2021ம் ஆண்டு திருமணம் ஆனவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 2022க்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் முடிவுகளையும் செயலையும் மக்கள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதை நீங்கள் புத்திசாலித்தனமாக சமாளிக்க வேண்டும். ஆன்மிகம் மற்றும் மதத்தின் மீதான உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி காலம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வருவதால், வருமான ஆதாரங்களும் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

மகரம்: வெளிநாட்டு குடியுரிமைக்காக அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். மகர ராசியில் புதன் இருக்கும் காலத்தில் நீங்கள் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்கலாம் மற்றும் பல பெரிய ஒப்பந்தங்களையும் பெறலாம். இந்த ராசி மாற்ற காலத்தில் புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.  

கும்பம்: இந்தப் பெயர்ச்சி காலம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் பணிச்சுமை முன்பை விட அதிகமாக இருக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகளையும் நீங்கள் கேட்கலாம். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்: புதன் கிரகத்தின் இந்த ராசிப் பெயர்ச்சி காலம் உங்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். நீங்கள் பல அரசாங்க டெண்டர்களைப் பெறலாம். குழந்தைகளின் திருமணம், கல்வி போன்ற பொறுப்புகளில் இருந்து விடுபடலாம். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு ஏற்படும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

ALSO READ | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News