'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' ... மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் வசிக்கும் ஓய்வு பெற்ற இயந்திர பொறியியலாளரும் மைக்ரோ கலைஞருமான அசோக் கார்க் இந்த வரிகளை மீண்டும் சரி என்று நிரூபித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மைக்ரோ கலைஞர் 7 மி.மீ. அளவு கொண்ட விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார், இது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலை தற்போது கல்கா கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. 
நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சிலையைப் பார்க்க வேண்டுமெனில் ஒருவர் பூதக்கண்ணாடியைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக அதன் பெயர் 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' பதிவு செய்யப்பட்டுள்ளது.


விவேகானந்த காலனியில் வசிக்கும் கார்க், இந்தூரில் தனது பொறியியலாளர் படிப்பின் போது மைக்ரோ ஆர்ட்டில் ஆர்வம் காட்டியதாக தன்னைப் பற்றிச் சொல்கிறார். ராமாயணம் ஒரு சிறிய தானிய அரிசியில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டார், கலையின் மீது ஆர்வம் கொண்டார். படிப்படியாக, இந்த கலையை கற்கத் தொடங்கினார். முதலில் இந்த கலையை மிகவும் கடினமாக உள்ளது என விட்டு செல்ல முயன்றுள்ளார், எனினும் இந்த கலையை விட்டுவிடாமல் தொடர்ந்து பயின்று வந்துள்ளார்.


முதலில் கார்க் அரிசி தானியங்களில் ராமாயணத்தை எழுதினார். இதில் அவர் வெற்றி பெற்றபோது, ​​மேலும் பல விஷயங்களில் மைக்ரோ ஆர்ட் பயன்படுத்த தொடங்கினார். இதனிடையே அரசு உத்தியோகம் கிடைக்க, கலையை தொடர காலம் கைகொடுக்க வில்லை. எனவே தனது கடமையை முடித்த பிறகு, இரவில் தனது பொழுதுபோக்கை நிறைவேற்றத் தொடங்கினார். தற்போது இதில் பல சாதனைகளையும் படைத்து வருகிறார்.


இதுகுறித்து கார்க் தெரிவிக்கையில்., மைக்ரோ ஆர்டுக்கு இரவின் நேரம் மிகவும் சாதகமானது, ஏனெனில் இந்த கலைக்கு முதலில் அமைதியான சூழ்நிலை தேவை. இரவு நேரத்திலேயே இந்த சூழல் அமைகிறது. வரும் காலங்களில் மேலும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.