மத்திய பிரதேச மாநிலம் பர்கத்துல்லா கல்லூரியில் மாணவிகளுக்ககு "மருமகள்" என்னும் புதிய பயிற்சி வகுப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிதாக திருமணாமாகி புது வீட்டிற்க்கு செல்லும் பெண்கள், அங்குள்ள புதிய குடும்ப நபர்களிடன் எவ்வாறு பழக வேண்டும், எப்படி நடத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துந்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்படம் என மத்திய பிரதேசத்தின் பர்கத்துல்லா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


3 மாதம் இந்த பயிற்சி வகுப்பு செயல்படும் எனவும், இந்த வகுப்புகள் வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என பல்கலைகழக துணை வேந்தர் DC குப்தா தெரிவித்துள்ளார். புகுந்த வீட்டில் பெண்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுத்தர இந்த சிறப்பு பயிற்சி வகுப்பு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள், தங்கள் பாடப்பிரிவுகளடன் சேர்த்து இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பயிலலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பயிற்சி வகுப்பில் சேரும் மாணவிகள், இந்த சமுதாயத்தில் தங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர்ந்துக்கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பயிற்சி குறித்து மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் நடைமுறை படுத்தப்படவுள்ளது. அதேப்போல் பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் பெற்றோரிடன், மாணவிகளின் நடைமுறையின் அடிப்படையில் பயிற்சி குறித்த நிறை குறை கருத்துகள் கேட்கப்பட்டு, பயிற்சி பாடங்கள் மேம்படுத்தப்படும் என குப்தா தெரிவித்துள்ளார்.