மத்திய பிரதேசத்தில் சுரங்கம் தோண்டிய தொழிலாளி கையில் 7.5 காரட் வைரம் கிடைத்ததால் லட்சாதிபதியாகி உள்ளார்...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா பகுதியை சேர்ந்தவர் சுபால். அப்பகுதியில் பல வைர சுரங்கங்கள் இருக்கும் நிலையில், சுபால் சுரங்கம் ஒன்றை தோண்டியுள்ளர். அப்போது, அவருக்கு அதிர்ஷ்டவசமாக 3 வைரக்கற்கள் கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சுபார், வைரக்கற்கள் கிடைத்தது குறித்து அப்பகுதி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். 


அவர்கள் அந்த வைரக்கற்களை எடை பார்த்தபோது 7.5 காரட் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த வைரக்கற்களை ஏலத்திற்கு விட அந்த அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இந்த வைரத்தின் மதிப்பு சுமார் 30 லட்சத்திலிருந்து 35 லட்சம் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வைரத்தை ஏலம் விடுவதில் இருந்து கிடைக்கும் தொகையில் 12 சதவிகிதம் வரிக்காக பிடித்தம் செய்யப்பட்டு 88 சதவிகிதத் தொகை சுபாலிடம் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


ALSO READ | இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி..!


இதனால், சுபாலின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சுபால் கூறுகையில், “எனக்கு வைரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பல ஆண்டுகள் இந்த பகுதியில் வேலை செய்துவருகிறேன். ஆனால், இப்போது தான் வைரம் கிடைத்துள்ளது. என் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.


சில நாட்களுக்கு முன்பு மற்றொரு தொழிலாளி மத்திய பிரதேசத்தின் புத்தேல்கண்ட் பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து 10.69 காரட் எடையுள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.