மகாசிவராத்திரி பூஜை 2024: செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்
இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரி ஆகும். இந்த மகாசிவராத்திரியில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும்.
மகா சிவராத்திரி 2024 : மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி நாளை அதாவது மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த அற்புத தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.
சிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நைவேத்தியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய - ஹர ஹர மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை. சிவராத்திரி அன்று இரவில் உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம். மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும்.
மகாசிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை:
* நாளை சிவராத்திரி என்பதால் இன்று மாலை வரை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.
* சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.
* சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
* மகா சிவராத்திரி வழிபாட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
* நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் படிக்கலாம், கேட்கலாம்.
* இரவு கண்விழித்து சிவபூஜை செய்யவேண்டும்.
* ஓம் நமசிவாய என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
* சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
மகாசிவராத்திரி அன்று செய்யக் கூடாதவை:
1. மகா சிவராத்திரியின் புனிதமான சந்தர்ப்பத்தில், பக்தர்கள் அரிசி, கோதுமை அல்லது பருப்பு வகைகளில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. மகா சிவராத்திரி நாளில் இறைச்சி, கோழி மற்றும் பிற அசைவ உணவுகளை உட்கொள்ளக்கூடாது. இது தவிர, தாமச குணம் கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
3. மகா சிவராத்திரி நாளில் மது அருந்தக் கூடாது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ