ஐயோ..! என்னாது `ஹோம் டெலிவரி` மதுபான திட்டம் ரத்தா....?
![ஐயோ..! என்னாது 'ஹோம் டெலிவரி' மதுபான திட்டம் ரத்தா....? ஐயோ..! என்னாது 'ஹோம் டெலிவரி' மதுபான திட்டம் ரத்தா....?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/10/15/136361-delivery-of-liquor-project-cancel.jpg?itok=LmWyX241)
வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று மராட்டிய மந்திரி விளக்கம்...!
வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று மராட்டிய மந்திரி விளக்கம்...!
மகாராஷ்டிரா மாநில அரசின் கலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், ''மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு நாங்கள் கொண்டுவரும் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். மக்களின் வீட்டுக்கே மதுவகைகளை டெலிவரி செய்யும் திட்டத்தை மகாராஷ்டிரா மந்திரி நேற்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே நேற்று கூறுகையில், “பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விரும்புகிறோம். மதுபானங்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்டால் அது மதுகுடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார். வருவாயை அதிகரிக்கவே அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக மராட்டிய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், மராட்டிய மாநில கலால் துறை மந்திரி பவன்குலே திடீரென தனது முந்தைய அறிவிப்பில் இருந்து பல்டி அடித்துள்ளார். வீடுகளுக்கு ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார்.