Cheapest Mahindra Scorpio: மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களுக்கு என பல ரசிகர்கள் உள்ளனர். ஸ்கார்பியோ கார் வாங்குவதே வாழ்க்கையில் ஒரு இலக்காக வைத்திருப்பவர்களும், அதற்காக பணம் சேமிப்பவர்களும் உண்டு. மஹிந்திரா ஸ்கார்பியோவின் சாலை இருப்பு மற்றும் டிரைவிங் திறன்களே பலரும் அந்த கம்பீரமான கார்களை விரும்புவதற்கான காரணமாக உள்ளது.
 
மஹிந்திரா ஸ்கார்பியோ 10 லட்சத்தில் கிடைக்கிறது, சாலை வரி செலுத்த தேவையில்லை; உடனே நம்பர் பிளேட் கிடைக்கும் என்ற செய்தி பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில், வெவ்வேறு நபர்கள் இந்தக் காரை வாங்க விரும்புவதற்கு வெவ்வேறு காரணங்களைக் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை வாங்க முடியாமல் பழைய ஸ்கார்பியோவை வாங்க திட்டமிட்டால், இன்று விற்பனைக்கு வரும் சில பழைய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.


பயன்படுத்திய ஸ்கார்பியோ செகண்ட் ஹாண்ட் காரை வாங்கினால், சாலை வரி கூட செலுத்த வேண்டியதில்லை, ஏனெனில் அது ஏற்கனவே செலுத்தப்பட்டிருக்கும். இத்துடன், புதிய காரின் நம்பர் பிளேட் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.


மேலும் படிக்க | Best 7 seater car: 5.25 லட்ச ரூபாயில் 7 சீட்டர் கார்! அதிரடியாய் விலையை நிர்ணயித்த மாருதி


CarWale.com இல் பட்டியலிடப்பட்டுள்ள 2019 Mahindra Scorpio S3 2WD 7 STR காரின் விலை 10 லட்சம் ரூபாய் ஆகும். இந்த எஸ்யூவி காஜியாபாத்தில் விற்பனைக்கு உள்ளது. இது 1,24,000 கிமீ தூரம்  பயன்படுத்தபப்ட்டுள்ளது. டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.


2018 மஹிந்திரா ScorpioS5 2WD 7 STR , CarWale.com இணையதளத்தில் 10.75 லட்சம் விலையில் கிடைக்கும்.. இந்த எஸ்யூவி லக்னோவில் விற்பனைக்கு உள்ளது. இது 1,05,000 கிமீ தூரம் சென்றுள்ளது. டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.


இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள, 2016 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ் காரின் விலை 10.25 லட்சம் ரூபாய் ஆகும். இந்த எஸ்யூவி லக்னோவில் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இது 1,31,000 கி.மீ. பயணம் செய்துள்ள இந்தக் காரின் இன்ஜின் டீசல் ஆகும்.


இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள, 2017 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்10 ரூ.10.5 லட்சம் ஆகும்.. இந்த எஸ்யூவி டெல்லியில் விற்பனைக்கு உள்ளது. இது மொத்தம் 78,000 கி.மீ. பயணம் செய்துள்ள இந்தக் காரின் இன்ஜின் டீசல் ஆகும்.


மேலும் படிக்க | Best Scooter: ஒரே மாதத்தில் 1 லட்சத்தையும் தாண்டிய இரு சக்கர வாகன விற்பனை! இது ஹீரோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ