ஜூன் 1, 2023 முதல் இந்த விதிகளில் மாற்றம்: இன்னும் சில நாட்களில், மே மாதம் முடிவடையும். அதன் பிறகு ஜூன் மாதம் தொடங்கும். ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் பல்வேறு துறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த முறையும் ஜூன் 1 முதல் பல மாற்றங்கள் நடக்க உள்ளன. இந்த மாற்றங்கள் சாமானியர்களின் நிதி நிலை மற்றும் வாழ்க்கையின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூன் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். இதனை அறிந்துகொண்டு அனைவரும் அதற்கு ஏற்றபடி தங்கள் பணிகளை திட்டமிடலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை அதிகரிக்கும்


ஜூன் மாதத்தில் மின்சார இரு சக்கர வாகனம் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு வழங்கப்படும் மானியத் தொகையை ஒரு kWh -க்கு ரூ.10,000 ஆக அரசாங்கம் உயர்த்தியுள்ளது தான் இதற்குக் காரணம் ஆகும். முன்னர் இந்த மானியத் தொகை ஒரு kWh -க்கு ரூ.15,000 ஆக இருந்தது. 


மேலும் படிக்க | இந்திய ரயில்வே: ரயில் என்ஜின்கள் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது எனத் தெரியுமா..!!


அரசின் இந்த உத்தரவு ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு, எலக்ட்ரிக் பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்கும் போது, மானியம் குறைக்கப்பட்டுள்ளதால், 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக செலவாகலாம். 


எரிவாயு சிலிண்டரின் விலை என்னவாகும்?


ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும். எரிவாயு நிறுவனங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை குறைத்தன. இருப்பினும், மார்ச் மாதத்துக்குப் பிறகு, 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மார்ச் 2023 இல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இப்போது இந்த விலை மாறுகிறதா அல்லது குறைகிறதா என்பது ஜூன் 1 ஆம் தேதியன்று தெரியவரும். 


சிஎன்ஜி - பிஎன்ஜி விலைகள்


ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அல்லது வாரத்தில் இருந்து சிஎன்ஜி - பிஎன்ஜி விலையிலும் மாற்றம் இருக்கும். பெட்ரோலிய நிறுவனங்கள் டெல்லி மற்றும் மும்பையில் விலையை மாற்றி அமைக்கின்றன. இந்த முறையும் அவற்றின் விலை மாறக்கூடும். அவற்றின் விலை ஏப்ரல் மாதத்தில் டெல்லி-என்சிஆர் -இல் குறைந்துள்ளது. மே மாதத்தில் அது நிலையானதாக இருந்தது, எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் ஜூன் மாதத்தில் சிஎன்ஜி-பிஎன்ஜி -யின் விலை என்னவாக இருக்கும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.


தங்க ஹால்மார்க்கிங் விதிகள்


தங்கத்தின் ஹால்மார்க் தொடர்பான புதிய விதிகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் 256 மாவட்டங்கள் மற்றும் 32 புதிய மாவட்டங்களில் மே 31 முதல் தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்படும். கடந்த ஆண்டுதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஒரு முறை அரசு ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.


வங்கி விதிகளில் மாற்றம்


இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 1 முதல் "100 டேய்ஸ் 100 பே" பிரச்சாரத்தை நடத்த உள்ளது. இதன் கீழ் உரிமை கோரப்படாத டெபாசிட்கள் கண்டறியப்படும். இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரச்சாரத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வங்கியும் 100 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத 100 டெபாசிட்களை செட்டில் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | New Wage Code: சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம்.. எப்போது அமலுக்கு வரும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ