மின்சார வாகனங்கள் மீதான GST வரி விகிதம் 5 % ஆக குறைப்பு..!
மின்சார வாகனங்களுக்கான GST வரி 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!
மின்சார வாகனங்களுக்கான GST வரி 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது, மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டும் என்றும், இந்த வரி குறைப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதேபோல, மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, சார்ஜர்கள் மீதான வரியும் 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் கூட்டம் டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்களின் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இது ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.