கொரோனா பீதிக்கு மத்தியில் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு புதிய வகை பண்டத்தை உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் அடைந்திருக்கும் நபர்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து குறைந்த செலவில் சுவைமிக்க பண்டத்தை தின்பதற்கு விரும்புகின்றனர். இந்த உணவு பிரியர்களுக்கு உதவும் வகையில் இன்று நாம் சுவைமிக்க பீட்ரூட் பர்பி செய்வது எவ்வாறு என்பது குறித்து பார்க்க இருக்கிறோம்.


ஆரோக்கியத்துடன் கூடி சரும அழகையும் கூட்டும் பீட்ரூட்...


பீட்ரூட் பர்பி செய்ய தேவையான பொருட்கள்...


  • 1 கப் பால்கோவா

  • 2 கப் அரைத்த பீட்ரூட் 1 கப் சர்க்கரை

  • 1 கப் பால் 

  • 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள்

  • 2 தேக்கரண்டி பாதாம் தூள்

  • நெய் தேவைக்கேற்ப 


செய்முறை...


முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யை நடுத்தர வெப்பத்தில் சூடாக்க வேண்டும். பின்னர் அரைத்த பீட்ரூடை நெய்யுடன் சேர்த்து 2 நிமிடத்திற்கு வறுக்க வேண்டும். 


2 நிமிடங்கள் கழித்து இந்த கலவையில் சர்க்கரை சேர்த்து, உருகும் வரை சூடேற்ற வேண்டும். மறுபுறம், வாணலியில் பால்கோவா கொட்டி வறுக்கவும். இப்போது பால்கோவா வறுத்ததும் சர்க்கரை சேர்த்து வறுக்கவும். இப்போது சர்க்கரை மற்றும் பால்கோவாவை வறுத்த பிறகு, ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் சமைத்து நெறுப்பை அணைக்கவும். 


கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் பீட்ரூட் ஜூஸ்... செய்வது எப்படி?...


இதற்குப் பிறகு, பீட்ரூட் கலவையில் பால் சேர்த்து கெட்டியாகும் வரை சமைக்கவும். கலவையை வாணலியை விட்டு வெளியேற ஆரம்பிக்கும் போது, ​​ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் தூள் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் சமைக்கவும். 


பின்னர் ஒரு தட்டில் நெய்யை தடவி எடுத்துவைக்கவும், முதலில் பால்கோவா கலவையை பரப்பவும், பின்னர் பீட்ரூட் கலவையை மேலே பரப்பி, ஒரு கரண்டி உதவியுடன் லேசாக அழுத்தவும். இப்போது கலவையை அப்படியே 2 மணி நேரம் வைக்கவும். நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிந்ததும்., பர்பியை விரும்பிய துண்டுகளாக வெட்டுங்கள். அவ்வளவு தான் பீட்ரூட் பர்பி தயார்.