அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலாவின் வாழ்க்கையை, படமாக எடுத்துவருகின்றனர். தற்போது அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2012-ம் ஆண்டு பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பெண்கல்வியை வலியுறுத்தி மலாலா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டு வந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மலாலாவிற்கு லண்டனில் சிகிச்சை அளிக்க்ப்பட்டது. அதன் பின்னர் குணமடைந்த மலாலா கடந்த 2014-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். மிகச்சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும் இவரை சேரும்.


இந்நிலையில், மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க முடிவு செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாயின. இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டிருக்கும் படக்குழுவினர் இப்படத்தின் முதல் நாள் வசூல் தொகையை மலாலா நிதிக்காக வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இப்படத்தை இயக்குநர் அம்ஜத் கான் ‘குல் மக்காய்’ என்ற பெயரில் மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். ‘குல் மக்காய்’ என்ற பெயரில் தலிபான்களுக்கு எதிராக எழுதி வந்ததால் அதையே இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.


இப்படத்தில் மலாலாவின் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ரீம் ஷைக் நடிக்கிறார். மேலும், அதுல் குல்கர்னி, திவ்யா தத்தா, அபிமன்யூ சிங், முகேஷ் ரிஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 


மலாலவின் வீடு அவர் படித்த பள்ளி ஆகியவற்றை 16 கேமிராக்களின் உதவியோடு படமாக்கியுள்ள படக்குழு காஷ்மீரின் சில இடங்களிலும் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.


இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு பெண்ணின் கையில் இருக்கும் புத்தகத்தில், குண்டு வெடித்துச் சிதறுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.