`மாரி 2` படத்தில் இணைந்த மலையாள நடிகர்!
பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி.
பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி.
இதையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியது. இது தொடர்பாக இயக்குனர் பாலாஜி மோகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாரி 2 அப்டேட்டினை பகிர்ந்து வருகின்றார்.
இந்த இரண்டாம் பாகத்தில் தற்போது தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள நடிகரான டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், நேற்று முதல் டோவினோ தாமஸின் போர்ஷன் தொடங்கியுள்ளது. இந்த தகவலை வர தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.