நாய் என நினைத்து வீட்டில் கரடி குட்டியை வளர்த்த பிரபல பாடகி..!
கரடி குட்டியை நாய் என நினைத்து செள்ளபிராநியாக வீட்டில் வளர்த்து வந்த பிரபல பாடகி கைது!!
கரடி குட்டியை நாய் என நினைத்து செள்ளபிராநியாக வீட்டில் வளர்த்து வந்த பிரபல பாடகி கைது!!
நம்மில் சிலருக்கு செல்ல பிராணிகள் மீது அதீத அக்கறையும் பாசமும் உண்டு. நான் அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அது விளையாட்டாக இருக்கட்டும் உணவு உண்ணும் முறையாக இருக்கட்டு நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க நாம் கற்றுக்கொடுத்து வளர்ப்போம். பெரும் பாலும் மக்களில் அதிகம் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதாக பல ஆய்வில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரபல பாடகி ஒருவர் தனது வீட்டில் நாய் என நினைத்து கரடியை வளர்த்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த 27 வயது பிரபல பாடகி ஜரித் சோபியா யாசின். இவர் வீட்டில் ஒரு கரடி குட்டியை நாய் குட்டி என நினைத்து வளர்த்துள்ளார். இது குறித்துஅவர் கூறும் போது தான் ஒரு இரவு காரில் வரும்போது காட்டுப்பகுதியில் ரோட்டோரமாக ஒரு நாய் குட்டி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அதை அவர் மீட்டு தனது வீட்டிற்கு எடுத்து சென்று அதற்கு உணவளித்து வளர்த்து வந்ததாக கூறினார். அது சிறியதாக இருந்ததால் நாய் என தான் நினைத்ததாகவும், கரடி என தனக்கு தெரியாது எனவும் கூறினார்.
இதையடுத்து காவல்துறையினர் கரடி குட்டியை மீட்டு மிருககாட்சிசாலைக்கு கொண்டு சென்றனர். அவர் வளர்த்து வருவது கரடிதான் என போலீசாருக்கு எப்படி தெரிந்தது என விசாரிக்கும்போது, அவர் நாய்குட்டி என நினைத்த தன் கரடிகுட்டிக்கு ப்ரூனோ என பெயரிட்டுள்ளார். அதனுடன் விளையாடுவது போன்ற வீடியோ, மற்றும் புகைப்படங்களை எடுத்து தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவேற்றியுள்ளார். அதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அது கரடிகுட்டி என்பதை உணர்ந்து போலீசாருக்கு இது குறித்து புகார் அளித்தது தெரியவந்தது.
கரடி குட்டியை நாய் குட்டி என நினைத்து பெண் ஒரு வீட்டில் அதை செல்லப்பிராணியாக வளர்த்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.