மும்பையில் சில பகுதிகளில் உள்ள மால்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் ஜனவரி 27 முதல் 24/7 திறந்திருக்கும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: மகாராஷ்டிராவில் சில பகுதிகளில் அமைந்துள்ள மால்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் 24 மணி நேரம் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கும் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மகாராஷ்டிரா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே புதன்கிழமை (ஜனவரி 22) அறிவித்தார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆதித்யா தாக்கரே கூறுகையில்... ஜனவரி 27 முதல், பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ், நாரிமன் பாயிண்ட் போன்ற குடியிருப்பு அல்லாத பகுதிகளில் உள்ள மால்கள், மல்டிபிளெக்ஸ், கடைகள் மற்றும் உணவகங்கள் 24 மணி நேரம் திறந்திருக்கும். எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த முடிவை யாரையும் சுமத்தாது என்று அவர் மேலும் கூறினார்.


தொடர்ந்து அவர் பேசுகையில், மும்பை லண்டனைப் போலவே ஒரு சர்வதேச நகரம் என்றும், நகரத்தில் சில கடைகள் மற்றும் மால்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் சிவசேனா MLA கூறினார். இது மும்பையின் வருவாயை அதிகரிக்கும் என்றும், வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.


அமைச்சரவையின் இந்த முடிவு மும்பை காவல்துறையினருக்கு வேலை சுமையை அதிகரிக்காது என்றும் ஆதித்யா தாக்கரே விளக்கினார். ஏனெனில், பப்கள் மற்றும் பார்கள் 24 மணி நேரம் திறந்த நிலையில் இருக்க அரசாங்கம் அனுமதிக்காது. பப்கள் மற்றும் மதுக்கடைகளுக்கான கால அவகாசம் ஏற்கனவே மதியம் 1:30 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், கலால் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் மாநில அரசு கொண்டு வராது என்றும் அவர் கூறினார்.


ஆதித்யா தாக்கரே வியாழக்கிழமை (ஜனவரி 16) ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதில் நகராட்சி ஆணையர் பிரவீன் பர்தேஷி, போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே மற்றும் இரு துறைகளின் மூத்த அதிகாரிகள், வணிக வளாகங்கள், ஹோட்டல் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த மேற்கு இந்தியாவின் ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் (HRAWI).