சீனாவில் உயிருடன் இருக்கும் எலி குட்டிகளை இளைஞர் ஒருவர் உண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், சீனாவில் உயிருடன் இருக்கும் எலி குட்டிகளை இளைஞர் ஒருவர் உண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனை திரி ஸ்ஹூக்ஸ் என உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர்.


இதனிடையே வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.