இயற்கையாகவே மூன்று சிறுநீரகங்களை கொண்ட ஆண்... அதிர்ந்த மருத்துவர்!
பிரேசிலில் முதுகு வலி என வந்தவரை ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது!!
பிரேசிலில் முதுகு வலி என வந்தவரை ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது!!
பிரேசிலில் நீண்ட நாட்களாக முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள் இது சாதாரண முதுகுவலிதான் என கூறி அவருக்கு மருந்துகள் வழங்கியுள்ளனர். அவரது ஸ்கேனிங் ரிப்போர்ட்டை பார்த்தபோது அதிசயத்தக்க உண்மை ஒன்று தெரிய வந்துள்ளது.
முதுகுவலி ஆசாமிக்கு உடலில் மூன்று கிட்னிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு கிட்னிகள்தான் இருக்கும். இவை குழாய் வழியாக சிறுநீரகப்பையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஆனால் இவரது மூன்றாவது கிட்னி குழாய்கள் ஏதுமின்றி நேரடியாக சிறுநீரகப்பையுடன் இணைந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் மூன்று கிட்னிகள் இருப்பது அவருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதுபோன்ற மூன்று கிட்னிகள் உள்ள சம்பவங்கள் மிக அரிதாகவே நடைபெறுவதாகவும், வேறு ஏதாவது சிகிச்சைக்கு வரும்போதே இதுபோன்ற சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உலக அளவில் சில நூறு பேர்களுக்கு மட்டுமே இதுபோல இருப்பதாகவும் கூறப்படுகிறது.