திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை 'Idiot' என்று கூறிய இளைஞருக்கு 20000 திராம்கள் அபராதம் 60 நாள் சிறை தண்டனை....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது நாட்டில் மட்டும் இல்லை உலகம் முழுவதும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், ஆணும் பெண்ணும் செல்போனில் பேசிக்கொள்வது மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்வது இயல்பான விஷயம். திருமணத்திற்கு முன்னர் ஆண் பெண்ணை திட்டுவதும், பெண் ஆணை திட்டுவது என்ற வேடிக்கையான சம்பவம் நடப்பது சகஜமான ஒரு நிகழ்வு. 


ஆனால், அபுதாபியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணை செல்லமாக அவர் திட்டியுள்ளார். அதற்காக அவருக்கு அந்நாடு உயர்நீதிமன்றம் சிறைத்தண்டனை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அபுதாபியை சேர்ந்த இளைஞர் தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணுடன் தினமும் வாட்ஸ் அப்பில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் அந்த பெண்ணை விளையாட்டாக ‘முட்டாள்’ (அராபியில்- ஹப்லா)  என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், இளைஞர் மீது புகார் தெரிவித்துள்ளார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த இளைஞருக்கு 60 நாள் சிறை தண்டனையும் 20000 திராம்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம்) அபராதமும் விதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கறிஞரிடம் கேட்டபோது அபுதாபியில், சமூகவலைதளங்களில் ஒருவர் மனது புண்படும்படி குறிஞ்செய்தி அனுப்பினாலோ அல்லது செய்தி பதிவிட்டாலோ அது சைபர் குற்றம் என தெரிவித்தார். 


துபாயில் இது போன்று நடப்பது இது முதல் முறை இல்லை. இதேபோன்று,  டாக்ஸி ஓட்டுநர் ஒருவருக்கு பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவமாக குறுந்தகவல் அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!