நீங்கள் திருமணத்தை பார்த்திருக்கலாம், ஆனால் ஒரே மணமேடையில் இரு மணப்பெண்கள், ஒரு ஆணை திருமணம் செய்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணமகன் இரு பெண்களையும் காதலிக்கிறாராம்! தாங்கள் இருவருமே ‘மிகவும்  மகிழ்ச்சியாக’இருப்பதாக மனைவிகள் கூறுகிறார்கள். பெண்கள் இருவரும் தன்னை நேசிக்கிறார்கள், அவர்களில் யாருக்கும் துரோகம் செய்ய முடியாது என்று கூறும் மணமகன் சாந்து கூறினார், அவர்கள் இருவரும் அவரை திருமணம் (Wedding) செய்துக் கொள்ள ஒப்புக்கொண்டதாக கூறுகிறார்.  


சத்தீஸ்கரின் (Chhattisgarh) பஸ்தரில் இந்த வினோதமான திருமணம் நடைபெற்றது. ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட அதிசயம் ஜனவரி 5 ஆம் தேதி நடந்த இந்த திருமணத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.  


இந்த அதிசயத் திருமணத்தின் வீடியோ இங்கே: 


https://www.india.com/wp-content/uploads/2021/01/qdBBR6SXKJd95Iyp.mp4?_=1


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரம் தொடங்கியது, மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தார் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தின் விவசாயியும் தொழிலாளியுமான சந்து மெளரியா (Chandu Maurya) 21 வயது பழங்குடி பெண் சுந்தரி காஷ்யப்பை காதலித்தார். மொட்டாக மலர்ந்த இவர்கள் காதலை பூவாக பூக்கச் செய்தது தொலைபேசி. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருப்பினும், விதியின் விளையாட்டு வித்தியாசமாக இருந்தது. ஒரு வருடம் கழித்து உறவினரின் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு சந்தித்த ஹசீனா மீது சந்துவுக்கு காதல் ஏற்பட்டது. 


Also Read | Elon Musk உலகின் பணக்காரர் ஆனது எப்படி தெரியுமா?


ஆனால், தனக்கு ஏற்கனவே காதல் (Love) இருப்பதை சந்து ஹசீனாவிடம் சொல்லிவிட்டார். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார் ஹசீனா.


“ஹசீனா மற்றும் சுந்தரி இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு என்னை திருமணம் செய்து ஒன்றாக வாழ   ஒப்புக்கொண்டனர். நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தோம், ஆனால் ஒரு நாள் ஹசீனா என் வீட்டிற்கு வந்துவிட்டார். ஹசீனா இங்கே வந்துவிட்டதை அறிந்த சுந்தரியும் என் வீட்டிற்கே வந்துவிட்டார. நாங்கள் மூவரும் குடும்பமாக ஒன்றாக வாழ ஆரம்பித்துவிட்டோம்” என்று சாந்து கூறுகிறார்.


இரண்டு பெண்களுடன் ஒன்றாக வசிப்பது பல கேள்விகளை எழுப்பின. கிராமத்தை (Village) சேர்ந்த பலரும் ஆட்சேபணை எழுப்பியபோது,  இரு பெண்களையும் திருமணம் செய்து கொள்ள சாந்து முடிவு செய்தார். இரண்டு பெண்களும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் யாரையும் விட்டுவிட முடியாது என்றும் சந்து சொல்கிறார். பெண்கள் இருவரும் அவருடன் ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டனர்.


Also Read | பனியால் சூழ்ந்த இடத்தில் குடிநீருக்கான குழாய் அமைப்பது எப்படி? watch the video


இந்த விநோதமான திருமணத்தில் கலந்துகொள்ள ஹசீனாவின் குடும்பத்தினர் வந்தார்கள். ஆனால், சுந்தரியின் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, வரவும் இல்லை. சந்து, தன் மனைவியர் இருவரோடு சேர்ந்து மூவராக, நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR