கைத்தறி பட்டு முகமூடியை அணிந்து திருமணம் செய்த தம்பதியினர்.. குவியும் பாராட்டு
அழகான அஸ்ஸாமி தம்பதியினர் கைத்தறி பட்டு முகமூடியை அணிந்து திருமணம் செய்துக்கொண்ட தை அடுத்து சமூக ஊடகங்களில், அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அஸ்ஸாம்: கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பல திருமணங்களையும் பிற நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து அல்லது ஒத்திவைத்திருக்கலாம். ஆனால் ஒரு அசாமிய தம்பதியினர் இதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். மணமகனும், மணமகளும் தங்கள் பாரம்பரிய உடையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கூடுதலாக, இருவரும் தங்கள் திருமண உடையுடன் பொருந்தக்கூடிய வகையில் பட்டு துணியால் செய்யப்பட்ட முகமூடியை அணிந்திருந்தனர்.
இவர்களின் திருமண விழாவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டது. இவர்களின் திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது சமூக விலகலை எடுத்து காட்டுகின்றன.
இந்த திருமணம் மே 22 அன்று அசாமின் குவஹாத்தியில் நடைபெற்றது. அஸ்ஸாம் பட்டினால் (Assam Silk) செய்யப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகமூடிகளை நந்தினி போர்ககாட்டி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த முக்காகவாசம் பாரம்பரிய வழியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
மணமகளின் ஒப்பனை கலைஞர் ஹிமாத்ரி கோகோய் திருமண வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததை அடுத்து, மணமகளின் வீடியோ டிக்டோக்கில் வைரலாகியது. இந்த வீடியோவை 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 1.27 லட்சம் லைக்குகளைப் பெற்ற இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகின்றது. மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள மாஸ்க் சமூகஊடக தளங்களில் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது.
குவஹாத்தியை சேர்ந்த பேஷன் மற்றும் ஜவுளி வடிவமைப்பாளர் நந்தினி போர்ககாட்டி, பட்டு மாஸ்க் பற்றி பேசுகையில், "மருத்துவ ஊழியர்களுக்கான அறுவைசிகிச்சைக்கான பாதுகாப்பு மாஸ்குகளை பயன்படுத்தாமல், துணியால் தயாரிக்கப்பட்ட மாஸ்குகளை அணிய மக்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்" என்றார்.
வீடியோவை பார்த்த பலர் பராட்டியுள்ளன. பேஸ்புக்கில் திருமணத்தை புகலாலி தாஸ் புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளார். அதையும் பார்த்து பலர் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். இது ஜோடியின் தனித்துவமான யோசனையை, சுமார் 34,000 பேர் இதை பார்த்து பாராட்டியுள்ளனர்.
லாக் டவுன் தொடங்கிய பிறகு, தம்பதிகள் பல்வேறு வழிகளில் திருமணம் செய்து கொண்டனர். மத்திய பிரதேசத்தில், மணமகள் மற்றும் மணமகன் மலர் மாலை மாற்றிக் கொள்ள ஒரு குச்சியைப் பயன்படுத்தி மாற்றிக் கொண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆன் லைன் மூலம் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு, குடும்பங்களுடன் கலந்து கொண்ட ஆன்லைன் திருமணங்கள் மிகவும் பிரபலமடைந்தன.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், லாக்டவுன் நாடு முழுவதும் மக்கள் திருமணம் செய்வதைத் தடுக்கவில்லை. மாறாக, மக்கள் ஆக்கபூர்வமான வழிகளில் திருமணங்களை செய்து கொள்கிறார்கள்.
(செய்தி: விக்னேஷ்வரன்)