விருச்சிக ராசிக்குள் நுழையும் செவ்வாய்; ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை..!!
செவ்வாய் டிசம்பர் 5ம் தேதி காலை 06:20 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறது. செவ்வாய் கிரகம் 2022 ஜனவரி 4 வரை இதே நிலையில் இருக்கும்.
Mars Transit 2021: செவ்வாய் டிசம்பர் 5ம் தேதி காலை 06:20 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறது. செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இருக்கும். செவ்வாய் கிரகம் 2022 ஜனவரி 4 வரை இதே நிலையில் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலனை கொடுக்கும்
மேஷம் (Aries)- செவ்வாய்ப் பெயர்ச்சி காலத்தில் எதிர்பாராத வகையில் செல்வம் சேரும். எனினும் இந்த கால கட்டத்தில் உடல் நலத்தில் சிறப்பு கவனம் தேவை. திருமணமானவர்களுக்கு தங்கள் மனைவியுடன் மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடக்கலாம்.
ரிஷபம் (Taurus)- செவ்வாய் பெயர்ச்சியின் போது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இருப்பினும், வாழ்க்கை துணையுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். காதல் துணைக்கு மன உளைச்சல் மற்றும் பிரச்சனை ஏற்படும் வகையில் பேசுவதை தவிர்க்கவும்.
மிதுனம் (Gemini)- இந்த பெயர்ச்சி பலன் தரும். முன்பு செய்த கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். குழந்தையைப் பற்றிய கவலை இருக்கும். உங்கள் எதிரிகள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ALSO READ | இந்த ராசிக்காரர்கள் கோவத்தை வென்று கூலாக இருப்பார்கள்: இதில் நீங்களும் உண்டா?
கடகம் (Cancer)- அலுவலகத்திலும் வீட்டிலும் பேசும் போது கவனமாக பேசவும். குடும்ப விஷயங்களில் எந்த முடிவையும் கவனமாக பரிசீலித்த பின்னரே எடுக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் பரஸ்பரம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
சிம்மம் (Leo)- இந்த செவ்வாய் பெயர்ச்சி உங்கள் தொழில் வாழ்க்கையை மேம்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கு இந்த பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். எனினும் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி (Virgo)- பழைய கடன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகலாம். எனினும் தன்னம்பிக்கையை கை விட வேண்டாம். பெயர்ச்சி காலத்தில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல், திருமண வாழ்க்கை மேம்படும்.
ALSO READ:தீராத பிரச்சனையா... கை மேல் பலன் கொடுக்கும் ‘5’ புதன் கிழமை பரிகாரங்கள்..!!
துலாம் (Libra)- பெயர்ச்சியின் போது கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அதிகப்படியான கோபத்தால், அன்புக்குரியவர்களின் மனக்கசப்புக்கு ஆளாக நேரிடும். எதிர்மறை எண்ணங்களையும் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம் (Scorpio)- செவ்வாய் பெயர்ச்சிப் பலன்களால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வந்த வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பயணத்தின் போது உற்சாகமாக இருப்பீர்கள். நிதி இழப்பை சந்திக்க வேண்டி வரும்.
தனுசு (Sagittarius)- செவ்வாய் பெயர்ச்சியின் போது செலவுகள் அதிகரிக்கும். கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவது ஆரோக்கியமாக இருக்கும். பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மகரம் (Capricorn)- வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் தவறான புரிதலால், பரஸ்பர விலகல் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம் (Aquarius) - குடும்பத்துடன் சுமுகமான உறவு இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான பாதை தெளிவாக இருக்கும். வியாபாரம் பெருகும். உடல் வலியை சந்திக்க வேண்டி வரும்.
மீனம் (Pisces)- துணையுடன் காதல் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் அல்லது அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். துறையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு அமையும். இந்தப் பெயர்ச்சி பணப் பரிவர்த்தனைக்கு ஏற்றதாக அமையும்.
ALSO READ: டிசம்பரில் வரும் சூரிய கிரகணம் இந்த 5 ராசிகளை பாடாய் படுத்தும்: ஜாக்கிரதை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR