இந்தோனேசியாவில் உள்ள பிரபல பூங்கா ஓன்றில், நிர்வாண கடற்கன்னி சிலைகளுக்கு பூங்கா நிர்வாகம் ஆடை அணிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவின் ஜார்கந்தா பகுதியில் இருக்கும் அல்கால் ட்ரீம்லேண்ட் பூங்கா பிரசித்தி பெற்றது. இந்த பூங்காவில் நிர்வாணமாக வடிவமைக்கப்பட்ட கடற்கன்னி சிலைகள் இரண்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளது. 


சமீபத்தில் கிழக்கு நாடுகளின் பாரம்பரியத்தினை கெடுப்பதாக தெரிவித்து இந்த சிலைகளின் நிர்வாணத்தை மறைக்க பூங்கா நிர்வாகம் சிலையின் மேல் துணிகளை போற்றியுள்ளது. மேலும் பார்வையாளர்கள் பார்வையில் அதிகம் தென்படாத வகையில் பூங்காவின் ஒதுக்குப்புற பகுதிகளில் இந்த சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தெரிவிக்கையில்., அல்கால் பூங்கா தற்போது குடும்பங்களின் பூங்காவாக மாறி வருகிறது. பள்ளி குழந்தைகளின் விடுமுறை நாட்களின் போது வெளியூர் பள்ளி மாணவர்களும் இந்த பூங்காவிற்கு அதிகளவில் வருகை புரிகின்றனர். எனவே பாரம்பரியத்தை காக்கும் வகையில் இந்த சிலைகளினை பார்வையாளர்களின் கண்பார்வையில் தென்படாத வகையில் இடம்மாற்றி வைத்துள்ளோம்.


இந்த நடவடிக்கைக்கும் எந்தொரு நிர்வாகத்திற்கும் எந்த வித தலையீடும் இல்லை, எந்த இயக்கத்தினரும் சிலைகளை மறைக்க நிர்பந்திக்க வில்லை எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.





எனினும் இந்த சம்பவம் ஆனது சிலைகளின் அழகை கெடுத்துள்ளது. சிலைகளின் சுதந்திரத்தை கூட இவ்வாறு தடுப்பதா என தெரிவித்து ட்விட்டரில் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.