7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அவர்களுக்கு விரைவில் இரு நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ரயில்வே மூத்த குடிமக்கள் நலச் சங்கம் (RSCWS) சமீபத்தில் 8வது ஊதியக் குழுவை ஜனவரி 1, 2024 முதல் அமல்படுத்துமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியது. அடுத்த ஆண்டு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் விகிதம் 50% -க்கு மேல் உயரும் என்பது அவர்களது வாதமாக உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய ஊதியக் குழு தேவை என்பதற்கான காரணங்களை RSCWS நிதியமைச்சகத்திற்கு அனுப்பிய குறிப்பில் விளக்கியுள்ளது. அந்த காரணங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்


மத்திய ஊதியக் குழுக்களுக்கு இடையே 10 ஆண்டு கால நீண்ட இடைவெளி இருப்பதால், கடந்த 70 ஆண்டுகளாக மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாணையின்படி, ஏழாவது ஊதியக் குழு அதன் அறிக்கையை பிப்ரவரி 2017 இல் சமர்ப்பித்தது. இதை அமல்படுத்துவதற்கான ஆணை, 2016 ஜனவரி 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட ஊதிய நிலுவை வழங்கப்படும் என்ற விதிமுறையுடன் 2017 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டது.


குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 -க்கு பதிலாக ரூ. 18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது


ஏழாவது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 26,000 -க்கு பதிலாக ரூ. 18,000 ஆக நிர்ணயித்துள்ளது என்று RSCWS கூறியது. மேலும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.15 -க்கு பதிலாக 2.57 ஆக தவறாக முன்மொழியப்பட்டது. முன்னதாக, 5 ஆவது மற்றும் 6 ஆவது ஊதியக் குழுக்கள், ஊதிய குழு திருத்தத்திற்கான 10 ஆண்டு காலம் என்ற விதிமுறையை மாற்றி, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% -க்கு மேல் உயரும் தேதியை இதற்கான காரணி ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்தன.


ஜனவரி-2024 முதல் அகவிலைப்படி 50% ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


கடந்த மூன்று மத்திய ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளின்படி, எதிர்காலத்தில் டிஏ / டிஆர் அடிப்படை ஊதியத்தில் 50% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்போது ஊதியத் திருத்தம் செய்யப்பட வேண்டும். பணவீக்கத்தின் விளைவை நடுநிலையாக்க ஊதிய கட்டமைப்பை திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஜனவரி-2024 முதல் DA / DR விகிதம் 50 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் படி பார்த்தால், ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் ஜனவரி, 2024 முதல் திருத்தப்பட வேண்டும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஜாலிதான்.... அதிரடி டிஏ ஹைக் நிச்சயம்.. உற்சாகத்தில் ஊழியர்கள்


2022-23 இல் தனிநபர் வருமானம் 1.97 லட்சமாக அதிகரித்துள்ளது


அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் பணவீக்கத்திற்கு எதிராக எதிர்பார்த்த நிவாரணத்தை அளிக்கவில்லை என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தனிநபர் வருமானத்தின் அதிகரிப்புடன் இவை ஒத்திசைக்கவில்லை. ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து செயல்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் ஓராண்டு அல்லது அதற்கு மேல் எடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், 8ஆவது ஊதியக்குழுவை விரைவில் துவக்கி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2019 ஜனவரி 1 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2015-16 -இல் நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.93,293 ஆக இருந்ததாக RSCWS கூறியது. இது தற்போது 2022-23ல் ரூ.1.97 லட்சமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அரசு தரப்பில் என்ன கூறப்படுகின்றது? 


மற்றொரு ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என கடந்த ஆண்டு மத்திய அரசு முன்னர் தெரிவித்தது. எட்டாவது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய அகவிலைப்படி 42 சதவிகிதமாக உள்ளது. இது விரைவில் 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால், ஜூலை முதல் அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். மேலும், ஜனவரி 2024 -லும் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50 சதவிகிதமாக உயரும். இதனால் ஊதியத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் 50% டிஏ, அதன் பிறகு 8வது ஊதியக்குழு... மொத்தத்தில் பண மழை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ