இளைஞரின் வயிற்றிலிருந்த கர்ப்பப்பையை நீக்கிய மருத்துவர்கள்..!
ஆணின் வயிற்றிலிருந்த கர்ப்பப்பையை நீக்கி மும்பை மருத்துவர்கள் சாதனை!!
ஆணின் வயிற்றிலிருந்த கர்ப்பப்பையை நீக்கி மும்பை மருத்துவர்கள் சாதனை!!
மும்பையை சேர்ந்த ஒருவர் தனக்கு குழந்தை இல்லை என்று மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரது விந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதில் உயிரணுக்கள் இல்லாமல் இருப்பதை கண்டனர். பொதுவாக ஆண்களுக்கு குழந்தையின்மைக்கு குறைந்த உயிரிணு காரணமாக இருக்கலாம். ஆனால் உயிரணுக்களே இல்லாமல் இருப்பது மிக அரிதான விஷயம் என்பதால் மேலும் பரிசோதனையை தொடர முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, அவரது அடி வயிற்றில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது மருத்துவகளுக்கு அதிர்ச்சியான சம்பவம் காத்திருந்தது. என்னவென்றால், அவரது வயிற்றில் பெண்களுக்கு இருக்கும் கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை குழாய் ஆகியன இருந்துள்ளது. இதுதான் அவருக்கு விந்தில் உயிரணு இல்லாததற்கு காரணம் என கண்டறிந்த மருத்துவர்கள் அதை ஆப்ரேஷன் மூலம் அகற்ற முடிவு செய்தனர்.
இதயடுத்து, அவருக்கு மும்பை JJ மருத்துவமனையில் கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். இனி விந்துவில் மெல்ல உயிரணுக்கள் உருவாகும் என்றும் அதன் மூலம் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.