மன அழுத்தத்தால் அவதியா? இவற்றை செய்து பாருங்கள்!
மன அழுத்தத்துடன் இருக்கும்போது நம் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருக்கும், நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது.
மன அழுத்தம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் இதுபோன்ற பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன, இதனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை ஏற்படுகிறது. மன அழுத்தம் இருந்தால் நம்மால் எந்த வேலையிலும் நிம்மதியாக ஈடுபட முடியாது, ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். மன அழுத்தத்துடன் இருக்கும்போது நம் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருக்கும், நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் மனநிலையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். பெண்கள் பல விஷயங்களையும் போட்டு மனதில் குழப்பிக்கொண்டு தேவையில்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர், உங்கள் மனதில் உள்ள கவலைகளை போக்க பின்வருவனவற்றை பின்பற்றுங்கள்.
1) இரவில் நல்ல தூக்கம் வரவில்லை என்றால், நமக்கு நாள் முழுவதும் சோர்வாக இருக்கும். போதுமான தூக்கம் மனநிலை, மன விழிப்புணர்வு, ஆற்றல் நிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க விரும்பினால் போதுமான அளவு தூங்கவேண்டும்.
2) தியானம், தசை தளர்வு, சுவாசப் பயிற்சி போன்ற பயிற்சிகளை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்வது மன அழுத்தத்திற்கு சிறந்த தீர்வளிக்கும். யோகா ஒரு சக்திவாய்ந்த பயிற்சியாகும், இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.
3) உங்கள் பள்ளி நண்பர்களுடன் அல்லது அலுவலக தோழர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். இது தவிர புதிதாக பணியாற்றும் இடத்திலும் உங்களுக்கென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி அவர்களுடன் இணைப்பில் இருங்கள். உங்களை சுற்றி ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கொண்டால் உங்கள் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
4) உங்களுக்கு சில திறமைகள் இருந்தால் ஓய்வு நேரத்தில் அதனை மெருகேற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள். சிலர் நல்ல திறமைசாலியாக இருப்பார்கள் ஆனால் மன அழுத்தம் காரணமாக எப்போதும் போன மனநிலையில் இருப்பார்கள். உங்களுக்கு பிடித்த வேலையில் உங்களை பிஸியாக வைத்திருப்பது நல்லது, அப்படி நீங்கள் பிஸியாக இருந்தால் வேறு எவ்வித பிரச்னையும் உங்கள் நினைவுக்கு வராது.
5) உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்ய நேரத்தை ஒதுக்குங்கள், பிடித்த உணவை சாப்பிடுவது அல்லது பிடித்த இடங்களுக்கெல்லாம் பயணம் செய்வது என உங்களுக்கான நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டும். உதாரணமாக நிம்மதியாக தூங்குவது, தோட்டத்தில் நடந்து செல்வது, மகிழ்ச்சியாக உணவை சுவைப்பது அல்லது நடந்துகொண்டே பிடித்த பாடல்களை கேட்பது போன்ற விஷயங்களை செய்யுங்கள்.
6) எப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்களோ, அதை நிதானமாக யோசித்து அதைத் தீர்க்க வழி தேடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் பொறுமையாக அதனை பேசி தீர்க்கும் வழியை பாருங்கள். மனம் விட்டு பேசினால் எல்லா விஷயத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்பதால் தேவையில்லாத டென்ஷனை ஓரம் கட்டுங்கள்.
7) சில சமயங்களில் உங்கள் பிரச்சனையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது உங்களுக்கு தீர்வு காண உதவும். எனவே உங்கள் கணவன், நெருங்கிய நண்பர்கள் மற்றும் பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர்கள் என அனைவரிடமும் நன்றாக பேசி பழகுங்கள்.
மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ