டீயில் பல வகைகளை கேள்விபட்டிருக்கிறோம். பால் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, கிரீன் டீ என வெவ்வேறு பெயர்களுடன் இருக்கும் டீ வரிசையில் சேர்ந்திருப்பது தான் இந்த பபிள் டீ. நீங்கள் இப்போது இந்த டீயைப் பற்றி கேள்விப்பட்டாலும், 1980களில் இருந்தே இந்த டீ பல்வேறு நாடுகளில் உணவுப் பழக்கத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இந்த பபிள் டீ புழக்கத்தில் இருக்கிறது. இந்த டீ மன அழுத்தத்துக்கும், தலைவலிக்கும் உடனடியாக குட்பாய் சொல்லிவிடுமாம். குடிப்போரை உடனடியாக ரிலாக்ஸ் நிலைக்கு கொண்டு வரும் ஆற்றலும் இந்த டீக்கு இருக்கிறது.
மேலும் படிக்க | 80/20 Rule: டயட்டில் இருந்தாலும் ருசியாக சாப்பிடலாம்... உடல் எடையை குறைக்கலாம்!
பபிள் டீ செய்முறை:
இந்த டீ செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பு அல்லது பச்சை தேயிலை ( இல்லை என்றால் வீட்டில் இருக்கும் சாதாரண தூளைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தேயிலையை பயன்படுத்துவது தான் சரியான வழிமுறை. பால் அல்லது கிரீம் வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன். பின்னர், மரவள்ளிக் கிழங்கை நன்கு மசித்து குழிழி வடிவில் உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு ஐஸ்கட்டி.
செய்முறை:
டீத்தூள் அல்லது தேயிலையுடன் பால் அல்லது கிரீமை கலந்து வழக்கமாக வைக்கும் தேநீரை தயார் செய்து கொள்ள வேண்டும். அதனை குளிர்வித்து அதனுடன் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப சர்க்கரை, தேன் என ஏதாவதொன்றை கலக்கிக் கொள்ளலாம். பின்னர் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் ஐஸ்கிரீம் மற்றும் மரவள்ளிக் கிழங்குகளை தேநீருடன் சேர்க்கவும். சிறிது நேர ஊர வைக்க வேண்டும். நன்கு ஊற வைத்தவிட்டால் உங்களின் பபிள் டீ ரெடி.
பபிள் டீ நன்மைகள்
டீயில் வழக்கம்போல ஆக்ஸிஜனேற்றிகள் இருக்கும். இவை உடலுக்கு நல்லது. இதுதவிர்த்து மன அழுத்தம், தலைவலியை உடனடியாக போக்கும் ஆற்றல் இந்த டீயில் இருக்கிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் மூலமாகவும் பபிள் டீ இருக்கும். உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை மரவள்ளிக் கிழங்கு கொடுக்கும். இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியாகவும், நரம்பு மண்டலங்கள் சுறுசுறுப்பாகவும் இயங்கும். மிகவும் அழுத்தமாக உணரும் சமயத்தில் இந்த டீ உங்களுக்கு உதவியாக இருக்கும். யூடியூப்களில் பபிள் டீ செய்முறை வீடியோக்கள் அதிகம் இருக்கின்றன.
(பொறுப்பு துறப்பு; இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் தகவல்கள் அடிப்படையில் மட்டுமே. உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது)
மேலும் படிக்க | ஆரோக்கியத்தை மட்டுமல்ல கால்சியத்தையும் எலும்பையும் குலைக்கும் பழக்கங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ