2017 ஆம் ஆண்டில், #MeToo அலை இந்தியாவிலும் வீசியபோது, பல நடிகைகள் தங்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பற்றித் மனம் திறந்து பேசினார்கள். அது பரபரப்பாக பேசப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா' என்பது இந்திய தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்படும் தொடர் நிகழ்ச்சிகளில் ஒன்று. பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்த இந்தத் இந்தித் தொடருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.  டி.ஆர்.பி (TRP ratings) அதிகம் கொண்ட நிகழ்ச்சியில் நடித்த பிரபலங்களில் சிலர் கடந்த கால அனுபவங்களை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார்கள்.  


நடிகை முன்முன் தத்தா, 'தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா' (தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி) தொடரில் பபிதா ஐயராக கலக்கியவர். அவர் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்.  இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான முன்முன் தத்தா, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்வார். அது அதிக அளவில் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. 


Also Read | சூயஸ் கால்வாய் டிராஃபிக் ஜாமுக்கு காரணம் என ட்ரோலான கேப்டன்


இருப்பினும், அவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் தொடர்பாக #MeToo என்ற தலைப்பில் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டபோது, அது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


2017 ஆம் ஆண்டில், #MeToo அலை இந்தியாவிலும் வீசியபோது, பல நடிகைகள் தங்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பற்றித் மனம் திறந்து பேசினார்கள். அது பரபரப்பாக பேசப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் செட்களில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக தங்கள் அனுபவங்களை பலர் வெளியிட்டபோது அது தந்த அதிர்ச்சி அதிகமாக இருந்தது.  90 கள் மற்றும் 2000 களின் முற்பகுதியில் நடைபெற்ற பாலியல் தொந்தரவுகளும் வெளிவந்தபோது அது பேரதிர்ச்சியளித்தது.


அந்த நேரத்தில், 2017 ஆம் ஆண்டில், 'தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா' தொடரில் நடித்த முன்முன் தத்தா, இன்ஸ்டாகிராமில் தனது மோசமான அனுபவத்தைப் பற்றித் பதிவிட்டார். 


Also Read | SHOCKING Women: பால்கனியில் நிர்வாணமாக நிற்கும் பெண்களின் புகைப்படங்கள் Viral


"#MeToo …… ஆம்…. #Metoo இது போன்ற ஒரு இடுகையைப் பகிர்ந்துகொண்டு, உலகெங்கிலும் உள்ள பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தில் நானும் இணைகிறேன். வில் சேர்ந்து, ஒரே படகில் பயணம் செய்த ஒவ்வொரு பெண்ணும் ஒற்றுமையைக் காட்டும் வகையில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். தற்போது பலரும் தங்களுடைய பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசும்போது, பிரச்சனையின் அளவு வெளியே தெரிகிறது. #MeToo  அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையைக் கண்டு சில 'நல்ல' ஆண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உண்மையில்  இது உங்கள் சொந்தக் கொல்லைப்புறத்தில் நடக்கிறது, உங்கள் சொந்த வீடு, உங்கள் சொந்த சகோதரி, மகள், தாய், மனைவி அல்லது உங்கள் பணிப்பெண் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம்… அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் அனுபவங்களைக் கேளுங்கள். அவர்களின் பதில்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.. அவர்களின் கதைகள் அதிர்ச்சியூட்டும்" என்று முன்முன் தத்தா பதிவிட்டிருந்தார்.


அவர் தொடர்ந்தார், "#Metoo… இதுபோன்ற ஒன்றை எழுதும்போது, சிறுமியாக இருந்த காலங்கள் நினைவுக்கு வந்து கண்கள் கலங்குகிறது. யாரைப் பற்றி சொல்வது? பக்கத்து வீட்டு மாமாவின் இரை தேடும் பார்வை, என்னை தவறான இடங்களில் தொட்டுவிட்டு, இதைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம் என்று என்னை அச்சுறுத்துவார். அவரைப் பற்றி சொல்வதா?  அல்லது தனது சொந்த மகள்களின் வயதில் இருக்கும் என்னை வித்தியாசமான பார்வையில் பார்த்த உறவினர்களைப் பற்றி சொல்வதா? அல்லது நான் பிறந்தபோது பிஞ்சுக் குழந்தையாக பார்த்த ஒரு மனிதர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வளர்ந்தபிறகு என் உடலைத் தொடுவது பொருத்தமானது என்று நினைத்தாரே, அவரைப் பற்றி சொல்வதே? , அல்லது என் உள்ளாடைகளில் கைகளை வைத்திருந்த எனது பள்ளி ஆசிரியரைப் பற்றி சொல்வதா? அல்லது நான் சகோதரராக நினைத்து ராக்கிக் கட்டிய மற்றொரு ஆசிரியர், வகுப்பில் உள்ள மாணவிகளின் ப்ரா பட்டைகளை இழுத்து மாரில் அடித்து திட்டுவாரே, அவரைப் பற்றி சொல்வதா?…" என சமூகத்தின் மாறும் பார்வைகளைப் பற்றி முன்முன் தத்தா தனது வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டார். அது மட்டுமல்ல, இந்த பாலியல் வன்கொடுமைகளின் நீட்சியைப் பற்றி மேலும் பேசுகிறார்.


"ரயில் நிலையத்தில் என்னைத் தொடும் அந்த மனிதர்... ஏன் ?? ஏன்??? ஏனென்றால் மிகவும் இள வயதில் பேசுவதற்கு பயப்படுவீர்கல். வயிற்ற்குள் பய உணர்வு பிசையும். இதை பெற்றோருக்கு எப்படி விளக்கப் போகிறீர்கள் என்றும் புரியாது. இதைப் பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை கூட சொல்ல வெட்கமாகவும் இருக்கும். இது எங்கே கொண்டு செல்லும்?  ஆண்கள் மீது ஆழ்ந்த வெறுப்பை வளர்க்கும் போக்கு மனதில் தொடங்கிவிடும். அவர்கள் தான் உங்களை இந்த விதத்தில் உணரவைத்த குற்றவாளி .. அந்த வெறுக்கத்தக்க, அடக்கப்பட்ட உணர்வை வெல்ல பல ஆண்டுகள் ஆகும் .... இந்த #MeToo இயக்கத்தில் சேரும் மற்றொரு குரலாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதுமட்டுமல்ல, நான் காப்பாற்றப்படவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். இதைப் பற்றி யாரிடமும் சொல்லியதும் இல்லை. ஆனால், இன்று எனது மனக்குமுறல்களை வெளிப்படையாக சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. நான்  என்னிடம் எதையும் முயற்சிக்கிறான். I AM PROUD OF WHO I AM"என்று முன்முன் தத்தா தனது பதிவில் தெரிவித்திருந்தார்.  


Also Read | சரித்திரத்தில் April 04ஆம் தேதி முக்கிய சம்பவங்கள் சொல்லும் செய்திகள் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR