பொது இடங்களில் ஆணும், பெண்னும் ஒன்றாக சேர்ந்து நடந்தால் போதும்... அதனை கொலை குற்றத்திற்கு ஈடாக இந்த சமுதாயம் மாற்றிவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இனி இந்த சமுதாயம் வாய் மூடி தான் இருந்தாக வேண்டும். காரணம் பொது இடங்களில் பாலியல் ரீதியான உறவிற்குமே அனுமதி அளித்து மெக்சிகோவின் ஒரு நகரம் ஆணை பிரப்பித்துள்ளது.


மெக்சிகோவின் குட்லஜாரா என்னும் பகுதியில், பொது இடங்களில் பாலியல் ரீதியான உறவிற்கு தடையில்லை என்பதற்கு ஏதுவாக புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 


பொது இடங்களில் ஆணும் பெண்னும் நெருக்கமாக இருப்பது, பொது இடங்கிளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் இருபாலினத்தவரும் தனியாக இருத்தல், தனியார் விடுதிகளில் திருமணமாக ஆணும் பெண்ணும் தனியாக இருத்தல் ஆகிய செயல்பாடுகள் சட்ட ரீதியாக குற்றம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையல், தற்போது இந்த செயல்பாடுகளுக்கு சட்ட விலக்க அளித்து மெக்சிகோ சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. 


நாட்டில் நடக்கம் பல்வேறு முக்கிய குற்றங்களை விட்டு விட்டு, சாலையேறம் இருக்கும் கார்களில் யார் உள்ளனர் என காவல்துறையினர் நோட்டம் விட்டு மதாந்திர டார்கெட்டுகளை முடித்து வருவதால், இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் இந்த சட்ட திருத்தம் குறித்து விமர்சனங்கள் வைத்து வருகின்றது.


காரணம் ஆண்டில் சராசரியாக 1.5 மில்லியன் வழக்குகள், இவ்வாறான பொது இடங்களில் பாலியல் அத்துமீறல் என்ற வழக்குகளே பதிவு ஆகின்றது. பதியப்படும் வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த வகை வழக்குகள் சுமார் 56% என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சட்ட திருத்தத்திற்கு இளசுகள் மத்தியில் வரவேற்புகள் இருந்தாலும், தேசிய நடவடிக்கை மற்றும் நிறுவன புரட்சிகர கட்சிகளால் எதிர்க்கப்பட்டு தான் வருகிறது.