புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கிமீ தூரம் பயணம் செய்து 18 வயது இளைஞர் ஒருவர் பீட்சா டெலிவரி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் மிச்சிகன் என்ற பகுதியில் இருக்கும் Steve’s Pizza என்ற பீட்சா கடை ஒன்று இயங்கிவருகிறது. பல்வேறு கடைகளில் இருக்கும் ஹோம் டெலிவரி முறை இந்த பீட்சா கடையில் இல்லை. எனினும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் விருப்பத்திற்காக 362 கிமீ பயணம் செய்து பீட்சாவை டெலிவர் செய்துள்ளார் அக்கடையில் பணிபுரியும் 18 வயது இளைஞர்.


ஜூலீ மார்கன் மற்றும் ரிச் மார்கன் என்ற தம்பதி 20 வருடங்களுக்கு முன்னர் மிச்சிகன் பகுதியில் வசித்து வந்துள்ளனர். ஆனால், பணி நிமித்தமாக தற்பொழுது வேறு நகரத்தில் வசித்து வருகின்றனர். எனினும், ஜூலி மார்கனின் பிறந்தநாளன்று மிச்சிகனில் உள்ள பீட்சா கடைக்கு செல்லவேண்டும் என திட்டமிட்டிருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக ரிச் மார்கன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இந்த விஷயத்தை அறிந்த அவர்களது உறவினர் ஒருவர், மிச்சிகனில் உள்ள பீட்சா கடைக்கு செல்போன் மூலம் அழைத்து நடந்தவற்றை விளக்கியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக அழைப்பை ஏற்ற 18 வயது இளைஞர், அவர் இருக்கும் இடத்திற்கே வந்து பீட்சா டெலிவர் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதனை  கேள்விப்பட்ட அனைவரும் அந்த இளைஞருக்கு பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். இதை ஜூலீ மார்கன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.