இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு முக்கிய செய்தி: ஏழைகளுக்கான இலவச தானியங்கள் வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை நீட்டிக்கலாம். உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமைகள் மற்றும் பணவீக்கத்தை மனதில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுக்க முடியும். இதயனிடையே கடந்த டிசம்பர் 23, 2022 ஆம் ஆண்டு முதல், இலவச உணவு தானியத் திட்டத்தின் கீழ் 81.35 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தியோகபூர்வ ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது, உணவு மற்றும் எரிபொருள் விலைகள் சமீபத்திய அதிகரிப்பு மற்றும் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை (இலவச ரேஷன் திட்டம்) எடுக்கப் படலாம் என்று கூறப்படுகிறது முடியும். மேலும் இந்த திட்டத்தை நீட்டிக்க தயாராகி வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், மேற்கு ஆசியாவில் போர் நிலவரத்தால் நிலைமை மேலும் மோசமடையலாம்.


அதுமட்டுமின்றி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போர் உலக உணவு விநியோக முறையை சீர்குலைக்கும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கியின் முயற்சிகளில் இது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு ஏஜென்சியின் (ICRA) தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், இந்தப் போர் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளை பாதிக்கும், இது பணவீக்க சுழற்சியை தீவிரப்படுத்தலாம்.


மேலும் படிக்க | Bank Holidays: அக்டோபரில் இத்தனை நாட்கள் தொடர்ந்து வங்கிகள் விடுமுறையா?


கரீப் கல்யாண் அன்ன யோஜனா:
கரீப் கல்யாண் அன்ன யோஜனா (Garib Kalyan Yojana) திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்களை அரசு வழங்கி வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச ரேஷன் திட்டம் உட்பட, உணவு வழங்கல் திட்டங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மத்திய அரசிடம் கையிருப்பில் உள்ளன. இத்திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


இலவச ரேஷன் திட்டத்தில் என்னென்ன கிடைக்கும்?
இலவச ரேஷன் திட்டத்தின் (Free Ration Scheme) கீழ் ஒரு கார்டுக்கு மொத்தம் 35 கிலோ உணவு வழங்கப்படும். அதாவது, 14 கிலோ கோதுமை மற்றும் 21 கிலோ அரசி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் தகுதியுள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக 2 கிலோ கோதுமை மற்றும் 3 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 25 வரை கிடைக்கும்:
இதற்கிடையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இலவச ரேஷன் திட்டத்தின் (Ration Card) கீழ் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதத்துக்கான இலவச விநியோகம் அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கியுள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி வரை பொதுமக்கள் இவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இலவச ரேஷன் திட்டம்:
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாகும். கொரோனா பிரச்சினை வந்த சமயத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இத்திட்டம் 2023 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் காலங்களில் இந்த திட்டம் மீண்டும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே இதனை அப்டேட் பண்ணுங்க! பணம் இழக்கும் அபாயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ