மோசமான வானிலை, சட்ட ஒழுங்கு பிரச்சனை, பராமரிப்பு உள்ளிட்ட பல காரணங்களாக தீபாவளிக்கு அடுத்த நாளான (அக். 25) இந்தியன் ரயில்வே கேட்ரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பல்வேறு ரயில்களை ரத்து செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் சுமார் 170-க்கும் மேற்பட்ட ரயில்களை இன்று இயக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 172 ரயில்கள் முழுவதுமாகவும், 35 ரயில்கள் பகுதிநேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 ரயில்கள் வழக்கமான பாதைகள் அன்றி வேறு பாதையிலும், 10 ரயில்கள் பராமரிப்பு பணிகளால் தாமதாகவும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளன. 


தீபாவளி தினமான நேற்றும் (அக். 24) 189 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, நாளையும் (அக். 26) இதுபோன்று பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | திருப்பதியில் பெருமாளை தரிசிக்க திட்டமா? டிசம்பர் மாத தரிசன ஆன்லைன் முன்பதிவு நாள்


எனவே, பயணிகள் தங்களின் பயணத்தை தயாரவதற்கு முன், தங்கள் ரயில்களின் நிலையை சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ரயில்கள் ரத்து மற்றும் ரயில்களின் அட்டவணையில் ஏற்படும் மாற்றங்கள் அசிம்கஞ்ச், மொராதாபாத், மும்பையின் சிஎஸ்எம்டி, பதான்கோட், நாக்பூர், புனே, ராம்பூர், ஆனந்த் விஹார் முனையம், சீல்டா, அகமதாபாத், ஹவுரா, குறிப்பாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் பல நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


01203, 01204, 01323, 01324, 01372, 01374, 01605. 04602 , 04647 , 04648 , 04685 , 04686 , 04699 , 04700 , 05334 , 05366 , 05517 , 05518 , 05591 , 05592 , 06802 , 06803 , 06980 , 07321 , 07685 , 07687 , 07688 , 07795 , 07906 , 07907 , 09108 , 09109 , 09110, 09113, 10101, 10102, 11121, 11122, 11305, 11306, 12105, 12114, 13345, 13346, 14203, 14204, 14213, 14214, 17641, 20948, 20949, 31215, 31215, 31215, 31215, 31215, 31215, 31215, 31215, 31215, 31215 31224, 31225, 31226, 31227, 31228, 31229, 31230, 31231, 31411, 31413, 31414, 31416, 31417, 31423, 31424, 31425, 31432, 31434, 31434, 31601, 31602, 31602, 31602, 31602 31802, 31813, 31838, 32225, 32226, 32229, 32230, 33363, 33366, 33401, 33402, 3341, 3341, 33412, 33421, 33422, 333433, 33433, 33433, 33433, 33433, 33433, 33422, 3342134353, 34355, 34356. 37256, 37305, 37306, 37307, 37308.


IRCTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் திரும்பப் பெறப்படும். ரயில்களில் வேலை, இயற்கை பேரழிவுகள் மற்றும் ரயில்கள் தடம் புரண்டது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய ரயில்வே ஒவ்வொரு நாளும் ரயில் சேவைகளை ரத்து செய்வது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | கோவை வெடிவிபத்து : நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு... இதுவரை 5 பேர் கைது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ