திருமலை: திருப்பதியில் டிசம்பர் மாத தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடர்பான தகவலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 30-ம் தேதி வரை ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் 26-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தினமும் 35 ஆயிரம் டிக்கெட் பேர் பெருமாளை தரிசிப்பதற்கான நுழைவு சீட்டுக்களை ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
டிசம்பர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்கு, https://tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், மறுநாள் 27-ம் தேதி காலை 10 மணிக்கு அதே இணைய தளம் மூலம் திருமலையில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | திருப்பதியில் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்
அதேபோல, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னறிவுப்பும் வெளியிடப்பட்டது. அக்டோபர் 25ம் தேதியன்று சூரிய கிரகணம் ஏற்படும் நாளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25ஆம் தேதி 12 மணி நேரம் கோவில் வளாகம் அடைக்கப்பட உள்ளதால், பக்தர்கள் அதற்கேற்ப திருப்பதி பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விஐபிக்கள், பிரேக் தரிசனம் மூலம் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அப்போது இலவச தரிசன அறைகளில் சில மணி நேரங்கள் பக்தர்கள் காத்திருப்பார்கள்.
தீபாவளி பண்டிகை, சூரிய கிரகணம் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | அக்டோபர் மாதம் அமோகமாக இருக்கப் போகும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ