காலையில் எழுந்தவுடன் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை வைத்துதான் அன்றைய நாளின் ஆரோக்கியம் ஆரம்பிக்கிறது. நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் ‘இதை’ செய்ய வேண்டும் என்பதை பழக்கமாக கொண்டுள்ளோம். ஒரு சிலர், காலையில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது, உடலுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாத பழக்கமாக தெரிந்தாலும், நாளடைவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதற்கு பதில் காலையில் ஹெல்தியான பானங்களை குடிப்பது உடலுக்கு நல்ல மாற்றத்தை தரும். உடல் எடையையும் வேகமாக குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன பானங்கள் தெரியுமா..?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்:


காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடித்து உங்கள் நாளை துவக்கலாம். தூங்கி எழுந்தவுடன் இவ்வாறு எலுமிச்சை நீரை குடிப்பது கண்டிப்பாக உங்கள் உடல் சோர்வுகளை களைக்க உதவும். தூங்கி எழுந்து, பல் துலக்கியவுடன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என கூறுவர். அவ்வாறு தண்ணீர் குடிக்க விரும்பாதோர் எலுமிச்சை நீரை குடிக்கலாம். இது, தண்ணீருக்கு நல்ல மாற்றாக இருக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள செல்களையும் இது உள்ளிருந்து பாதுகாக்க உதவும். 


2.கிரீன் டீ:


கிரீன் டீயில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. இதனால், நாள்பட்ட நோய்களை தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக தங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பானம், கிரீன் டீ என்கின்றனர் ஆலோசகர்கள். மேலும், மூலையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் கிரீன் டீ உதவுமாம். உடலில் உள்ள சர்க்கரை அளவுகளை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் கிரீன் டீ உதவும். 


மேலும் படிக்க | உடல் எடை உடனடியா குறையணுமா? இரவில் இந்த மேஜிக் பானங்களை குடிங்க!!


3.பிளாக் காபி:


பிளாக் காபி, கொழுப்பின் அளவு குறைவாக இருக்கும் பானங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் கேஃபைன் சத்து நிறைந்துள்ளது. இதை குடித்தால் கவன சிதறல் ஏற்படாமல் இருக்குமாம். இதிலும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்து இருப்பதால் உடலில் உள்ள ரத்த செல்கள் பாதிப்படையாமல் இருக்குமாம். டைப் 2 டயப்பிட்டீஸ் இருப்பவர்கள், கை நடுக்கத்தால் அவதிப்படுபவர்கள் பிளாக் காபி குடிக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாதாரண டீ, காபிக்கு பதிலாக பிளாக் காபி குடிப்பது உடலுக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால், இதை அளவிற்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. 


4.இலவங்கப்பட்டை டீ:


இலவங்கப்பட்டை தேநீர் சுவை மற்றும் நறுமணம் நிறைந்த பானமாகும். உடலில் ஏற்படும் உப்பசத்தை தவிர்க்க இலவங்கப்பட்டை தேனீரை குடிக்கலாம். இலவங்கப்பட்டை தேனீரை குடிப்பதனால், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு சமமாக இருக்கும். இன்சுலின் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இந்த தேனீர் இருதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவும் உதவும் என சில மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. எதை சாப்பிட்டாலும் அதை எளிதில் ஜீரணிக்க செய்யும் சக்தி இலவங்கப்பட்டை தேனீருக்கு உள்ளது. 


5. கற்றாழை ஜூஸ்:


கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் பொருளை கொண்டு உருவாக்கப்படுவதுதான் கற்றாழை ஜூஸ். இதில், உடலுக்கு தேவையான பல சத்துகள் ஒளிந்துள்ளன. வயிற்று பிரச்சனைகளான செரிமான கோளாருகள், மலச்சிக்கல் போன்ற பல கோளாறுகளை கற்றாழை ஜூஸ் எளிதில் ஒழித்துக்கட்டவல்லது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும் பல சத்துக்கள் கற்றாழை ஜூஸில் உள்ளது. சரும பராமரிப்புக்கும் கூட கற்றாழை ஜூஸ் உதவும். சர்க்கரை அளவை குறைக்கவும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும் பானங்களுள் கற்றாழை ஜூஸும் ஒன்று. இதை அளவுடன் எடுத்துக்கொண்டால் உடலில் நோய் அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம். 


மேற்கூறியவற்றை உடற்பயிற்சியுடன் சேர்த்து உங்கள் டயட் பட்டியலில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக உடல் எடையை வேகமாக குறைக்கலாம். 


மேலும் படிக்க | 1 நாளில் 1 கிலோ எடை குறையணுமா? இதோ சுலபமான வழி, இதை குடிங்க!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR