உடல் எடை உடனடியா குறையணுமா? இரவில் இந்த மேஜிக் பானங்களை குடிங்க!!

Weight Loss Tips: கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமலும், ஜிம்மிற்கு செல்லாமலும் கூட உடல் எடையை குறைக்க முடியும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 25, 2022, 01:38 PM IST
  • எடை இழப்புக்கு வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இரவில் வெந்தய நீர் அருந்துவது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • வெந்தய நீர் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும்.
உடல் எடை உடனடியா குறையணுமா? இரவில் இந்த மேஜிக் பானங்களை குடிங்க!! title=

உடல் எடையை குறைக்கும் பானங்கள்: இன்றைய காலத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைவரும் தங்களது உடல் கட்டுக்கோப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பருமனான உடல் வாகை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில், உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. எனினும், உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சியை தவறாமல் செய்வது ஆகியவற்றை அனைவராலும் செய்ய முடிவதில்லை. 

அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமலும், ஜிம்மிற்கு செல்லாமலும் கூட உடல் எடையை குறைக்க முடியும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் இரவில் சில ஆரோக்கியமான பானங்களை குடிக்கத் தொடங்குங்கள். இவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டை எடையைக் குறைக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிது தேன் கலந்து தேநீர் தயாரித்து தினமும் இரவில் குடித்து வர, சில நாட்களில் வித்தியாசம் தெரியும்.

வெந்தய நீர்

எடை இழப்புக்கு வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரவில் வெந்தய நீர் அருந்துவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய நீர் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும். அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன மற்றும் எடையைக் குறைக்க உதவுகின்றன.

மேலும் படிக்க | உடல் பருமன் மள மளவென குறையணுமா... ‘இவற்றை’ வயிறு நிரம்ப சாப்பிடுங்க! 

பீட்ரூட் மற்றும் எலுமிச்சை

எலுமிச்சை எடையைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. பீட்ரூட் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது எடையை குறைக்க உதவுகிறது. இந்த பானம் உடலில் உள்ள நச்சை நீக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

மஞ்சள் பால்

பால் குடிக்கும் பழக்கம் இருந்தால், மஞ்சள் பால் குடிக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவும். மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மஞ்சள் பால் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இஞ்சி தேநீர்

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எடையைக் குறைக்க உதவும். இஞ்சி டீ குடிப்பதால் பசியும் கட்டுக்குள் இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. பால் சேர்க்காமல் இஞ்சி டீ குடித்தால் உடல் எடை குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முட்டையை பிரிட்ஜில் வைக்கும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News