பெண்களுக்கு ஆபத்தான இடம், அவர்களது சொந்த வீடு தான்...
கடந்தாண்டில் கொலை செய்யப்பட்ட பெண்களில் பகுதியளவு, தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது!
கடந்தாண்டில் கொலை செய்யப்பட்ட பெண்களில் பகுதியளவு, தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது!
பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினமான நேற்று (நவம்பர் 25) ஐநா ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களது வீடு தான் எனவும், காரணமாக ஒரு ஆண்டில் கொலை செய்யப்படும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர் அவரது சொந்த குடும்பத்தாலே கொலை செய்யப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி கடந்த 2017-ஆம் ஆண்டு சுமார் 87000 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சுமார் 50,000 பெண்கள், அதாவது 58% பெண்கள் தங்களது பெற்றோர் (அ) உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 30000 (அ) 34% பெண்கள் தங்களுக்கு நெறுக்கமான நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு 6 பெண்கள் தங்களுக்கு விருப்பமானவர்களால் கொல்லைப்படுகின்றனர் எனவும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
மற்றுமொரு அதிர்ச்சி தகவலாக., உலகலாவிய கொலைகளில் 80% ஆண்கள் தான் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மை ஆண்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என UNODC தலைவர் யூரி ஃபெடோடோவ் தெரிவித்துள்ளார்.
இந்த கொலைகளுக்கு பின் இருக்கும் காரணம் குறித்து ஆராய்கையில், பெரும்பான்மை கொலைகள், பலியானவர்களின் காதல் விஷயங்களாலே ஏற்பட்டுள்ளது. UNODC தகவலின் படி 100000 பெண்களுக்கு 1.3 பெண்கள் இத்தகு காரணத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலேயே இத்தகு கௌரவ கொலைகள் நடப்பதாகவும், ஆப்பிரிக்காவை பொருத்தவரையில் 1 லட்சம் பெண்களில் 3.1 பெண்கள் கௌரவ கொலை செய்யப்படுவதாகவும், அமெரிக்காவில் 1.6 பெண்கள் கௌரவ கொலை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆசியா 0.9 என்ன குறுகிய எண்ணிக்கையினை பெற்றுள்ளது. அதே வேலையில் இப்பட்டியலில் இறுதி இடம் பெற்றிருப்பது ஐரோப்பா தான். இந்நாட்டில் லட்சத்திற்கு 0.7 பெண்கள் மட்டுமே கௌரவ கொலை செய்யப்படுகின்றனர் என UNODC குறிப்பிட்டுள்ளது!