Mother`s Day 2023: வந்தாச்சு அன்னையர் தினம்..உங்கள் அம்மாவிற்கு பரிசு கொடுக்க சிம்பிள் ஐடியாக்கள் இதோ
உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி உங்கள் அம்மாவிற்கு சரியான கிஃப்ட் கொடுக்க சில ஐடியாக்கள்.
“அம்மா என்றழைக்காத உயிரில்லையே..” என்ற பாடல், வெறும் பாட்டு மட்டுமல்ல பலரது உணர்வு என்று யாரும் யாருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை. நாட்டிற்கு நாடு, ஒரு தாய் தனது குழந்தைகளை வளர்க்கும் முறை வேறுபடலாமே அன்றி, தாய்மை உணர்வு என்பது எல்லா தாய்களுக்கும் ஒன்றுதான். அது மனிதர்களானாலும் சரி, மிருகங்களானாலும் சரி.
அன்னையர் தினம்:
பெரும்பாலான இல்லங்களில் பிள்ளைகள்தான் அம்மாக்களிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பார்களே அன்றி, தாய்மார்கள் எப்பாேதுமே பிள்ளைகளிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை, பாசத்தை தவிர. அப்படி எதையும் எதிர்பாராமல் வாழும் அம்மாக்களுக்கான ஸ்பெஷல் தினம், இந்த வருடம் மே 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் அன்னைக்கு என்ன பரிசு தரலாம் என யோசித்து விட்டீர்களா? இல்லை என்றால் கவலை வேண்டாம். இங்கே சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உபயோகித்து பயன்பெறுங்கள்.
அம்மாவிற்கு லீவு காெடுங்கள்:
தமிழ் நாட்டு தாய்மார்கள் எது வேண்டும் எது வேண்டாம் என பெரும்பாலும் தனது பிள்ளைகளிடம் கூற மாட்டார்கள். ஆனால், அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் எப்படி விடுமுறை தேவை படுகிறதோ, அதே போல நம் அம்மாக்களுக்கும் விடுமுறை தேவைப்படுகிறது. அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவை எந்த வேலையும் செய்ய விடாமல் அவருக்கு ஒரு நாளாவது லீவு கொடுங்கள். அவருக்கு பிடித்த தோழி அல்லது உறவினர் இல்லத்திற்கு அழைத்து செல்லுங்கள். அன்று முழுவதும் வீட்டு பொறுப்புகளை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள். அதன் பிறகு, இனி வரும் நாட்களிலும் அம்மா சொல்லும் வீட்டு வேலைகளில் நீங்கள் பங்குபெறுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
மலர்கொத்து-கிரீடிங் கார்டு:
உங்களது தாயாருக்கு அன்பை வெளிப்படுத்தும் வகையிலான சிறு சிறு பொருட்கள் பிடிக்கும் என்றால், அவருக்கு கையினால் எழுதப்பட்ட ஒரு அட்டையுடன் சேர்த்து பூங்கொத்தை கொடுங்கள். இது அவரை கண்டிப்பாக மகிழ்விக்கும்.
அம்மா-மகன்/மகள் புகைப்படம் அடங்கிய நெக்லஸ்:
அம்மாவின் புகைப்படமும் உங்கள் புகைப்படமும் அடங்கிய நெக்லஸை உங்கள் அம்மாவிற்கு பரிசளியுங்கள். அதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவருக்கு உங்கள் ஞாபகம்தான் வரும்.
அம்மாவுடன் நேரம் செலவிடுங்கள்:
இப்போது இருக்கும் பரபரப்பான உலகில் மொபைலை பார்ப்பதற்கும் தங்கள் வேலையை பார்ப்பதற்குமே பலருக்கு நேரம் சரியாக இருக்கிறது. அன்னையர் தினத்திலாவது, உங்கள் அம்மாவுடன் முழுமையாக நேரம் செலவிடுங்கள். அன்று ஒரு நாள் உங்களது செல்போன் பயன்பாட்டை குறையுங்கள். உங்கள் அம்மா அதிகம் செல்போன் உபயோகித்தாலும் அவரிடம் அமர்ந்து பேசுங்கள். உங்கள் அம்மாவிற்கு தியேட்டருக்கு சென்று படம் பார்க்க பிடிக்கும் என்றால் அவரை படத்திற்கு அழைத்து செல்லுங்கள். அல்லது அவருக்கு பார்க்-பீச் போன்ற இயற்கையான அழகு நிறைந்து இடம் பிடிக்கும் என்றால் அவரை அங்கே அழைத்து செல்லுங்கள்.
புதிதாக எதையாவது ட்ரை பண்ணலாம்:
உங்கள் அம்மா எல்லா நாட்களிலும் புடவைதான் கட்டுவார் என்றால், அவரை அன்னையர் தினம் அன்று மட்டுமாவது சுடிதார் அல்லது மாடர்ன் உடைகளை உடுத்த வையுங்கள். உங்கள் அம்மா, இது வரை முயற்சி செய்யாத ஒரு விஷயத்தை செய்ய வைத்து அழகு பாருங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ