இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அம்மாக்களுக்கான கிப்ட்களை வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் செய்து வருகின்றனர். இதையடுத்து, எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக இந்த ரெசிப்பிக்களை செய்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீஸி ஃப்ரைஸ்:


தேவையான பொருட்கள்:


  1. ஃபிரெஞ்சு ஃப்ரைஸ்-160 கிராம்

  2. கவுடா சீஸ் மையோ

  3. மோட்ஸரெல்லா மற்றும் செட்டர் சீஸ்

  4. சில்லி ஃப்ளேக்ஸ்

  5. தேவையான அளவு உப்பு


செய்முறை:


  1. ஃபிரஞ்சு ஃபிரைக்களை எடுத்துக்கொண்டு பொன் நிறத்தில் வரும் வரை வருக்கவும். 

  2. வருத்து எடுத்தவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். 

  3. ஒரு தட்டில் கவுடா சீஸ் மையோ, மாட்ஸரெல்லா மற்றும் செட்டார் சீஸுடன் பாதி ஃபிரஞ்சு ஃப்ரைஸ்களை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

  4. பிறகு, சில்லி ஃப்ளேக்ஸை மேலே தூவி பரிமாறுங்கள். 


மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட்டை வேறொருவரின் பெயருக்கு மாற்ற முடியுமா.. விதிகள் கூறுவது என்ன...!


மாம்பழ குல்ஃபி:


தேவையான பொருட்கள்:


  1. 2 கப் பால்

  2. அரை கப் சுண்டக்காச்சிய பால் (condensed milk)

  3. கால் கப் பால் பவுடர்

  4. 2 ஏலக்காய்

  5. பிஸ்தா மற்றும் பாதாம்

  6. தேவையான அளவு சர்க்கரை

  7. தண்ணீர்

  8. மாம்பழ கூழ் (Mango Pulp)

  9. பால் பவுடர் 1 கப்

  10. மில்க் மெய்ட் 1 கப்

  11. வெட்டி வைத்த பிஸ்தா 

  12. வெட்டி வைத்த பாதாம்


செய்முறை:


  1. அரை கப் தண்ணீரை தவாவில் காய வையுங்கள்

  2. தண்ணிர் காய்ந்த பிறகு பால் பவுடரை சேர்த்து கிளறிக்கொண்டேயிருங்கள்

  3. மில்க் மெய்டை கலந்து நன்கு கிளருங்கள்.

  4. நன்கு கிளறிய பிறகு, மாம்பழ கூழை போட்டு கிளறுங்கள்.

  5. இதையடுத்து, இப்படியே 1 நிமிடத்திற்கு கிளறவும்.

  6. ஒரு நிமிடத்திற்கு பிறகு, அடுப்பிலிருந்து கடாயை இறக்குங்கள். 

  7. அதை, நன்கு ஆர வைத்து குல்ஃபி கப் அல்லது ஒரு டம்ளரில் ஊற்றி வையுங்கள்.

  8. ஊற்றி வைத்த அந்த மாம்பழ குல்ஃபியை ஒரு நாள் முழுவதும் ஃப்ரீஸரில் வையுங்கள். 

  9. ஒரு நாள் ஆன பிறகு, அதை குளிர்சாதன பெட்டியிலிருந்த எடுத்து, வெட்டி வைத்த பிஸ்தா மற்றும் பாதாமை தூவிவிடுங்கள். 

  10. இதை அப்படியே எடுத்து சாப்பிட்டீர்களென்றால், சுவையான மாம்பழ குல்ஃபி ரெடி. 


பாேண்டா:


செய்முறை:


  1. பெரிய போண்டாவை, அதன் தோளை நீக்கி நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள். 

  2. கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கோதுமை மாவு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். 

  3. பிசைந்த மாவை உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள். 

  4. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடுங்கள். 

  5. எண்ணெய் நன்றாக சூடேறிய பின்னர் தீயை குறைவான அளவில் வைத்து போண்டாவை சுட்டு எடுக்கவும். 

  6. சுட சுட போண்டாவை அதற்கு ஏற்ற சைட் டிஷ் உடன் சுவையுங்கள். 


கேக்:


தேவையான பொருட்கள்:


  1. வாழைப்பழம்

  2. மெல்ட் செய்த பட்டர்

  3. நாட்டுச்சர்க்ரை

  4. எண்ணெய்

  5. கேக் செய்யும் மாவு

  6. பேக்கிங் சோடா

  7. பேக்கிங் பவுடர்

  8. பால்

  9. க்ரிம் சீஸ்

  10. ஐஸிங் சுகர்


செய்முறை:


  1. முதலில், வாழைப்பழம், பால் மற்றும் நாட்டு சர்க்கரையை ஆகியவை பேஸ்ட் போல் வரும் வரை கலக்கவும்.

  2. அடுத்து, வாழைப்பழ பேஸ்ட்டில் மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கவும்.

  3. சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வெண்ணெயை மெல்ட் செய்து கலக்குங்கள்.

  4. கேக் செய்ய பயன்படுத்தும் ovenஐ முன்கூட்டியே சூடுபடுத்திக்கொள்ளுங்கள். 

  5. அதில், கேக்கை 180 டிகிரி செல்சியஸில் சுமார் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

  6. பிறகு கேக்கை ஆற வைக்கவும்.

  7. ஐசிங் சுகர், சீஸ் க்ரீம் சேர்த்து டெக்கரெட் செய்யவும்.

  8. சுவையான முட்டை கலக்காத கேக் தயார். 


மேலும் படிக்க | Mothers Day 2023: அம்மாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஃபைனான்சியல் டிப்ஸ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ