தாய்மார்களின் சாபத்தை பெற்ற பெண்களுக்கான `Hooker` shorts!
பிரபல ஆடை நிறுவனம் வெளியிட்டுள்ள `Hooker` shorts வடிவமைப்பினை குறித்து சமூக வலைதளங்களில் தாய்மார்கள் புகார் அளித்து வருகின்றனர்!
பிரபல ஆடை நிறுவனம் வெளியிட்டுள்ள 'Hooker' shorts வடிவமைப்பினை குறித்து சமூக வலைதளங்களில் தாய்மார்கள் புகார் அளித்து வருகின்றனர்!
Walmart மற்றும் Target போன்ற நிறுவனங்கள் தற்போது பெண்களுக்கான விளையாட்டு ஆடையாக Hooker shorts எனும் ஆடையினை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் சிறய வடிவிலும், வழக்கத்திற்கு மாறான தோற்றத்திலிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆடைகளுக்கு தாய்மார்களின் தரப்பில் இருந்து எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தன் மகளுக்கு விளையாட்டு ஆடை வாங்கச் சென்ற பெண்மனி ஒருவர் இந்த ஆடையினை விமர்சிக்கும் வகையில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது...
"பிரியமான டார்கெட் நிறுவனத்திற்கு... உங்கள் நிறுவனத்தின் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. சமீபத்தில் என் மகளுக்காக விளையாட்டு ஆடை வாங்க அங்காடிக்கு சென்றேன். என் மகளுக்கு ஏற்ற ஆடையினை என்னால் வாங்க முடியவில்லை., காரணம் அங்காடியில் இருந்த ஆடைகள் யாவும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு இல்லை.
பெண் பிள்ளைகளுக்கு நீங்கள் அறிமுகம் செய்துள்ள புதுரக ஆடைகளான eeny-tiny, itsy-bitsy, way-too-short shorts யாவும் பெண்மையினை காப்பது போல் இல்லை,. பெரும் ஏமாற்றத்துடன் இறுதியாக ஆண்கள் பிரிவில் சென்று தான் என் மகளுக்கு ஆடை வாங்கினேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Assignment: Mom என்னும் பெயரில் கணக்கில் தன் கருத்தினை பகிர்ந்துள்ள இந்த தாயின் கருத்தினைப் போலவே பலரும் தங்களது கருத்தின் மூலம் இந்த ஆடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.