நம்மில் பலர், நம் வாழ்க்கையில் ஏதாவது சிறிய அளவில் அசெளகரியம் ஏற்பட்டாலே சட்டென்று அப்செட்டாகி விடுவோம். ஆனால், கொஞ்சம் நிறுத்தி நிதானமாக செயல்பட்டால் என்ன பிரச்சனை என்பதும் அந்த பிரச்சனைக்கான வழியும் நம் கண்முன் தெரியும். இந்த ‘அமைதியோ அமைதி’ மந்தித்தை தனது தினசரி வாழ்க்கையில் உபயோகிப்பவர்தான் எம்.எஸ்.தோனி. ரசிகர்களால் ‘தல’ என்றும் ‘கேப்டன் கூல்’ என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் அமைதிக்குப்பின்னால் அடக்கமும் நற்பண்புகளும் நிறையவே அடங்கியுள்ளன. இவரைப்போல நீங்களும் கூலாக செயல்பட வேண்டுமா..? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைதியாக இருப்பது எப்படி? 


பேசாமல் இருப்பதற்கும் அமைதியாக இருப்பதற்கும் நிறையவே அர்த்தங்கள் இருக்கின்றன. அதிகம் பேசுவதில் தவறில்லை. ஆனால், எங்கு பேசுகிறோம் எப்படி பேசுகிறோம் என்பதில்தான் விஷயமே உள்ளது. நீங்கள் மட்டும் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தால் உங்கள் எதிரில் இருக்கும் நபர் கேட்டுக்கொண்டு மட்டும்தான் இருப்பார். அதனால், அவரையும் பேச விடுங்கள். அவர் பேசுவதையும் கேளுங்கள். நீங்கள் வேலை செய்யும் இடங்கள் அல்லது படிக்கும் இடங்களை நோட்டமிடுங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது சுற்றி இருப்பவர்களின் செயல்களை கவனியுங்கள். இது, உங்களுக்குள் பல புரிதல்களை உண்டாக்கும். தோனி பெரிதாக பேசமாட்டார், ஆனால் அவர் ஒரு விஷயம் பேசினாலும் அவை ‘நச்’சென நம் மனதில் பதிந்து விடும். “Definitely Not” நம் மனங்களில் பதிந்தது போல. 


மேலும் படிக்க | சிம்புவை போல நீங்களும் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..!


சவாலான நேரங்களை கையாள்வது எப்படி..?


பிறரிடம் பேச கூட நேரமில்லாமல் நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், நமக்கான நேரத்தை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதிலும் நமக்கொரு பிரச்சனை என்று வந்துவிட்டால், கத்தி கூப்பாடு போட்டு ஊரை கூப்பிடக்கூடாது. பிறரிடம் எரிந்து விழக்கூடாது. உங்களுக்கு என்ன நடக்கிறதோ அதற்கு நீங்களோ அல்லது மற்றவர்களோ பொருப்பல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இருக்கும் பிரச்சனையை குறித்து யோசிப்பதற்கு பதிலாக அந்த பிரச்சனையை எப்படி தீர்க்கலாம் என்பது பற்றி சிந்தியுங்கள். நம்பிக்கைக்கு உரியவரிடம் உதவி கேட்கலாம், தப்பில்லை. 2011 உலக கிரிக்கெட் போட்டியில் தோனி நெகடிவாக யோசித்திருந்தால் நமக்கு கப் கிடைத்திருக்குமா? அல்லது ஹெலிக்காப்டர் ஷாட் தரிசனம்தான் கிட்டியிருக்கமா? எனவே, சவாலான தருணங்களில் அதை எதிர்கொள்வது எப்படி என்று மட்டும் சிந்தியுங்கள். 


உங்களின் செயல்களில் கவனம் இருக்கட்டும்..


“இந்த கேள்வி வராவிட்டால் என்ன செய்வது..இந்த கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்தவது, நான் இதை படிக்கவே இல்லை” போன்ற கேள்விகள் நாம் தேர்வுக்கு படிக்கும் போது தோன்றும். அப்படி யோசித்தால் நாம் கடைசி வரை எதையும் முழுமையாக படிக்க முடியாமலேயே போய்விடும். எனவே, எப்போதும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் இன்று இல்லையென்றாலும் நிச்சயமாக என்றாவது கிட்டும். இறுதி வரும் விளைவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதை நினைத்துக்காெண்டு நம் முயற்சிகளை கைவிடக்கூடாது. 


தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை


வாழ்வில் எந்த விஷயத்திலும் தோல்வி அடையாதவர் என யாருமே இருக்க முடியாது. யாராவது ஏதாவது ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்துதான் போயிருப்பர். எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே மன அமைதியும் திடமான தைரியமும் நமக்கு வந்துவிடும். நோ சொல்ல கற்றுக்கொள்வது போல, அந்த ‘நோ’ வை வாழ்க்கை நமக்கு சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும். 


மேலும் படிக்க | Trisha: ‘இது தெரியமா போச்சே..’ த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம் இதுதானா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ