இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37-வது பிறந்த நாளான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்ட மாநிலம், ராஞ்சி நகரில் பிறந்த மகேந்திர சிங் தோனி 2004-ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் துவங்கினார். அணியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே தன் தனிப்பட்ட ஆட்டத்தினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்திய அணி சரிவை நோக்கிச் செல்லும்போது இறுதியில் களமிறங்கி தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றதில் தோனிக்கு பெரும் பங்கு உண்டு. 



தோனியின் பிறந்தநாளில் பல கிரிக்கெட் வீரர்களும் அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  ஒரு சிறந்த நாளில் 500-வது சர்வதேசப் போட்டியில் களமிறங்க உள்ளீர்கள். இது இந்தியாவுக்கு அருமையான நாள். பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா. நீங்கள்தான் என்றுமே என் உத்வேகம்” என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.



முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் ஒரு புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு அதைச் சுட்டிக்காட்டி, ``பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. இந்த ஸ்ட்ரெச்சைவிட உங்கள் ஆயுள் மிக நீளமானதாக இருக்க வேண்டும். உங்கள் ஸ்டம்பிங்கைவிட வேகமாக மகிழ்ச்சியை அனைத்திலும் பெற வேண்டும். ஓம்  ஃபினிஷாய நமஹா!”  என தனது ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.