MS Dhoni Latest News Tamil : உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தேறியிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பெரும் பணக்காரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். உலகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். அந்தளவுக்கு வெகுவிமரிசையாகவும் கோலாகலமாகவும், கொண்டாட்டங்களின் உட்சமாகவும் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம் இருந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, மகள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி திருமண விழா... குடும்பத்துடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?


எம்எஸ் தோனியின் வாழ்த்து


 



அத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான வாழ்த்துகளையும் எம்எஸ் தோனி தெரிவித்திருக்கிறார். அதில் அன்பு, மகிழ்ச்சியோடு ராதிகாவை பார்த்துக் கொள்ளுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராதிகாவின் முகத்தில் இருக்கும் சிரிப்பு எப்போதும் குறையக்கூடாது, அந்த அன்பதை ஆனந்த் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார் அவர். ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதியை விரைவில் மீண்டும் ஒருமுறை சந்திக்க இருப்பதாகவும், இருவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார் எம்எஸ் தோனி. 


இருவருக்குமான இந்த திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கட்டும், புதிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும் இருவருக்கும் திருமண வாழ்க்கை சந்தோஷம், மகிழ்ச்சி, ஆச்சரியங்கள் நிறைந்திருக்கட்டும் என்றும் தோனி தெரிவித்துள்ளார். தோனியின் இந்த வாழ்த்து இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.


ஆனந்த் - ராதிகா திருமண விழா


இந்தியாவின் பெரும் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம் மும்பையில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் கலாச்சார மையத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இதேபோல் அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டு ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதேபோல் டபள்யூ டபள்யூ வீரர் ஜான் சீனா, ஷாருக்கான், ரன்வீர் சிங், சல்மான் கான் ஆகியோரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், நடனமாடி திருமண விழாவை உற்சாகப்படுத்தினர்.


மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி weds ராதிகா மெர்ச்சன்ட்... காதல் முதல் கல்யாணம் வரை... அனைத்தும் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ