Mukesh Ambani House EB bill News : ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தன்னுடைய கடைசி மகனுக்கு உலகமே வியக்கும் வகையில் திருமணத்தை நடத்தி பிரம்மிக்க வைத்தார். தங்களது வீட்டில் நடக்கும் கடைசி கல்யாணம் என்பதால் பணத்தை கணக்கு வழக்கு இல்லாமல் வாரி இறைத்துவிட்டார். விருந்தினர்கள் வரவேற்பு, உபசரிப்பு, ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் என களைக்கட்டிய திருமண விழாவுக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயை கொட்டி செலவழித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. மும்பையின் அன்டிலியா வீடு முதல் நீதா அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ கலாச்சார மையம் வரை, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அத்துணை இடங்களும் மின்விளக்குகளாலும், அலங்கார தோரணைகளாலும் பளிச்சென மின்னின,  கோலாகலமாக ஜொலித்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ராதிகாவை அன்போடு பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்த் - எம்எஸ் தோனியின் இதயப்பூர்வமான வாழ்த்து


குறிப்பாக அம்பானி குடும்பம் வசிக்கும் அன்டிலியா வீடு மட்டும் திருமணம் முடியும் வரை நாளொரு வண்ணம், பொழுதொரு கொண்டாட்டமாகவே இருந்தது. 27 அடுக்குமாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் இருக்கும் அம்சங்களை இப்போது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த வீட்டில் இல்லாத அம்சங்களே இல்லை என சொல்லிவிடலாம். அன்டிலியா வீட்டில் 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், ஒன்பது பெரிய லிப்ட்கள், நீச்சல் குளம், மூன்று ஹெலிபேடுகள் மற்றும் 160 கார்கள் நிறுத்தும் இடம் என பார்க்க பார்க்க பிரம்மிக்க வைக்கும் அத்தனை அம்சங்களும் அந்த பில்டிங்கில் இருக்கிறது. இந்த பில்டிங்கை பாரமரிப்பதற்காக மட்டும் சுமார் 600 பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 


இவ்வளவு பெரிய கட்டடத்துக்கு எவ்வளவு மின்சாரம் தேவை இருக்கும்? என கேட்டால் அதற்கான பதில் தலையை கிறுகிறுக்க வைக்கும். ஆம், சுமார் 7 ஆயிரம் நடுத்தர குடும்பங்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு இணையான உபயோகத்தை, இந்த வீட்டில் பயன்படுத்தப்படுகிறதாம். மாதம் மாதம் இந்த ஒரு வீட்டிற்கான மின்நுகர்வு மட்டும் தோராயமாக 6,37,240 யூனிட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தொகை சுமார் 70 லட்சம் ரூபாய். இதிலும் முகேஷ் அம்பானிக்காக சில தள்ளுபடிகளும், சலுகைகளும் இருக்கிறதாம்.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்போது ஆனந்த் அம்பானியின் திருமணம் வேறு மிக கொண்டாட்டமாக நடந்திருப்பதால், இந்த வீட்டிற்கு இதனை விட மும்மடங்கு மின்சார நுகர்வு ஆகியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டிலியாவின் கட்டுமானம் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. இந்த ஒரே வீடு கட்டுவதற்காக முகேஷ் அம்பானி செலவழித்த தொகை சுமார் ரூ. 15,000 கோடி. 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த கட்டிடம் அதன் ஆடம்பரமான வடிவமைப்பு மற்றும் வசதிகள் காரணமாக இந்தியாவில் இருக்கும் நவீன அரண்மனை என்று வர்ணிக்கப்படுகிறது.


ஆண்டிலியாவில் உள்ள ஊழியர்கள் வழங்கப்படும் சம்பளத்தைக் கேட்டால் இன்னும் தலையை கிறுகிறுக்க வைக்கும். பிளம்பர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். அங்கு இருக்கும் ஊழியர்களுக்கு வீடு உள்ளிட்ட இன்னபிற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்டிலியா வீடு கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அம்பானி குடும்பத்தின் அபரிமிதமான செல்வத்தையும் ஆடம்பரத்துக்கு சான்றாகவும் அமைந்திருக்கிறது. 


மேலும் படிக்க | தங்கம் போல் ஜொலித்த அம்பானி மருமகள்... ராஜ கம்பீரத்துடன் நிதா அம்பானி - ரிசப்ஷென் காஸ்ட்யூம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ