கணவர் சன்டே கிரிக்கெட் விளையாடப்போவது பிடிக்கலையா... அப்போ மனைவிகள் இதை செய்யுங்க

Relationship Tips: திருமண ஆன பிறகும், கணவர் அவரின் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதாக தோன்றினால், அதற்கு மனைவி பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Sep 12, 2024, 14:04 PM IST

திருமண உறவை விட நட்பு என்பது மிகுந்த பலமானது என கூறப்படுவது உண்டு. அதாவது, காதல் உறவோ, திருமண உறவோ முறிவதை விட நட்புறவு என்பது மிக குறைவாகவே முறியும் வாய்ப்புள்ளது. எனவேதான், நண்பர்களை யாராலும் அவ்வளவு சீக்கிரம் பிரிக்க முடியாது என்கிறார்கள்.

1 /8

திருமணமாகி கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வாழும்போதுதான் பல்வேறு சிக்கல்களை சந்திப்பார்கள். அந்த தம்பதிகள் காதலிக்கும்போது இந்த சிக்கல்கள் குறித்து நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.  

2 /8

அப்படி ஒரு சிக்கல்தான், கணவரின் நண்பர்கள். உங்களிடம் நேரம் செலவழிப்பதை விட உங்கள் கணவர் நண்பர்களிடம்தான் அதிகம் இருக்கிறார் என நினைத்துவிட்டீர்கள் என்றாலே சிக்கல் வந்துவிட்டது என அர்த்தம்.   

3 /8

உதாரணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நீங்களும், உங்கள் கணவரும் ஒன்றாக வீட்டில் இருப்பீர்கள் எனும்போது, உங்களின் கணவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் கிரிக்கெட் விளையாட செல்கிறார்கள் எனில் சில மனைவிமார்களுக்கு நிச்சயம் கோபம் வரும்.   

4 /8

மனைவிமார்களுக்கு, கணவன் அலுவலகத்திற்கு பின்னர்  தனக்குதான் அதிக கவனம் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், பெரும்பாலான கணவர்கள் தங்களின் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்கவே விரும்புவார்கள். கணவன் இப்படியிருக்கையில் மனைவி என்ன செய்வது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.   

5 /8

இதுகுறித்து சமூக வலைதள பிரபலம் லவ்லி சர்மா Zee Switch தளத்திற்கு அளித்த பேட்டியில், கணவன்கள் நண்பர்களுடன் சுற்றுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை, ஆனால் மனைவிக்கும், நண்பர்களுக்கும் சமமான அளவில் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்கிறார்.   

6 /8

மேலும் இதுகுறித்து லவ்லி சர்மா கூறுகையில்,"உங்கள் கணவர் நண்பர்களுக்கு அதிக கவனம் கொடுக்கிறார் என்றால் அவர்களின் நண்பர்களுடன் நீங்களும் நட்பாக வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.   

7 /8

மேலும்,"கணவரின் நண்பர்களுடன் விரோதமாக இருப்பது நல்லதல்ல. அப்படியாகிவிட்டால் நீங்கள் உங்களின் கணவருக்கு வில்லன் ஆகிவிடுவீர்கள். கணவர் நண்பர்களுடன் வெளியே செல்வதை தடுக்காதீர்கள்" என்கிறார்.   

8 /8

நீங்கள் அவர்களின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராகிவிடும் போது உங்களிடம் கணவர் நேர்மையாக நடந்துகொள்வார், வாய்ப்பிருக்கும்போது உங்களையும் நண்பர்களுடன் வெளியே அழைத்துசெல்வார். மேலும் உங்களுக்கு தனியாக நேரம் செலவிடவும் வாய்ப்பும் கிடைக்கும் என லவ்லி சர்மா கூறினார்.