இசையைக் கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? எல்லோரும் எந்த விதமான மனநிலையிலும் பாடம் மனதிற்கு இதம் அளிக்கிறது. பலருக்கு தூங்கும்போதும் பாடல்களைக் கேட்கும் வழக்கம் உள்ளது. உங்களூக்கும் அந்த பழக்கம் உள்ளது என்றால், கவனம் தேவை. ஏனென்றால் தூங்குவதற்கு முன் பாடல்களைக் கேட்பவர்களின் தூக்கத்திலும், அவர்களுக்கு  பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தூங்கும்போது, ​​​​இசை ஒலிப்பதை ஆப் செய்தாலும், நம் மூளையில் அதுஇ தொடர்ந்து ஒலித்துக் ஒண்டே இருக்கிறது  ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. 'சைக்கலாஜிக்கல் சயின்ஸ்' இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூக்கம் பற்றிய ஆராய்ச்சி அமெரிக்காவில் உள்ள பேய்லர் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் நரம்பியல் இணைப் பேராசிரியரான மைக்கேல் ஸ்க்லின் என்பவரால் செய்யப்பட்டது. தூக்கத்தில் இசை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் ஆராய்ச்சி செய்தார். ஒரு நாள் இரவு அவரது தூக்கம் திடீரென கலைந்துய் எழுந்ததாக அவர் கூறினார், பின்னர் அவர் தூங்குவதற்கு முன்பு கேட்ட அதே இசை அவரது மூளையில் ஒலிப்பதை உணர்ந்தார். இதற்குப் பிறகுதான் அவர் இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார்.


ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!


பேராசிரியர் ஸ்க்லின் இது குறித்து கூறுகையில், இசையை விரும்பாதவர் இருக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் தூங்க முயற்சிக்கும் போது கூட மூளையில் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று அவர் கூறினார். இதனால் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


இந்த ஆய்வில் 50 பேரிடம் மேற்கொண்டதாக அவர் கூறினார். ஆய்வுன் போது, ​​தூங்கும் முன் பல வகையான இசையைக் ஒலிக்க செய்து, அதனால் தூக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டார். தூங்கும் முன் அதிகமாக இசையைக் கேட்பவர்களின் தூக்கம் பதிக்கப்படக் கூடும் என்பது ஆய்வில் தெரிய வந்தது என்று அவர் கூறினார். இசையைக் கேட்கும் நேரமும் முக்கியம், அதனால் தூங்கும் முன் இசையைக் கேட்காதீர்கள் என்றார்.


ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR