See Pics: ரொமான்ஸ் மூடில் பகவான் கிருஷ்ணா... பிகினி உடையில் கோபியர்கள்...
கிருஷ்ணரை அவமதித்து ஓவியம் வெளியிட்ட இஸ்லாமியர்... வெறும் விமர்சனத்தை கிளப்பும் சர்ச்சை புகைப்படம்!!
கிருஷ்ணரை அவமதித்து ஓவியம் வெளியிட்ட இஸ்லாமியர்... வெறும் விமர்சனத்தை கிளப்பும் சர்ச்சை புகைப்படம்!!
பகவான் கிருஷ்ணரின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பும் இஸ்கான் அமைப்பு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர் அக்ரம் ஹுசைன், கிருஷ்ணரை சர்ச்சைக்குரிய வகையில் தீட்டியதற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு, அக்ரம் ஹுசைன் வெளியிட்ட கலைப்படைப்புகள், மீண்டும் தற்போது ட்விட்டரில் வெளியான பிறகு, இஸ்கான் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மாநில சுகாதார மற்றும் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரிடம், ஓவியர் மற்றும் அவரது படைப்புகளின் மீது கடுமையான நடவடிக்கைகளைத் எடுக்கக் கேட்டுக்கொண்டது. பிகினி உடையணிந்த பெண்களால் சூழப்பட்ட இந்து கடவுளான விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக வணங்கப்படும் இந்து கடவுளில் ஒருவரான பகவான் கிருஷ்ணர் ஓவியத்தை அக்ரம் ஹுசைன் 2015 ஆம் ஆண்டு வெளியிடபட்டது.
கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சமூக ஊடகத்தில் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பதிவிற்கு, பெங்களூரைச் சேர்ந்த நவீன் எதிர்வினையாற்றினார். இதனால் இஸ்லாமிய கும்பல் ஒன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் அக்ரம் ஹுசைன் ஓவியம், நெட்டிசன்களிடையே கோபத்தைக் கிளறியுள்ளது.
ALSO READ | WATCH: சிட்டி பாஜரே... பாடலுக்கு குத்தட்டாம் போட்ட 93 வயது மூதாட்டி...
மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக அக்ரம் உசேன் மீது 2015 ஆம் ஆண்டு FIR எனினும், அக்ரம் ஹுசைன் வரைந்த இந்த குறிப்பிட்ட ஓவியம், பெரிய எதிர்ப்பை சந்தித்தது இந்து முதல் முறை அல்ல. இந்து கடவுளை கேலி செய்யும் மூர்க்கத்தனமான கலைப்படைப்பு, ஏப்ரல் 2015-ல் வெளியிடப்பட்ட சமயத்திலேயே, இந்து அமைப்புகளின் கோபத்தை எதிர்கொண்டது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக அக்ரமுக்கு எதிராக இந்து ஜாக்ரன் மஞ்ச், குவஹாத்தியில் உள்ள லத்தாசில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது.
ஏப்ரல் 2015’இல், அக்ரம் ஹுசைனின், மது பாட்டில்கள் மற்றும் உள்ளாடைகளை அணிந்த பெண்களுடன் காட்சி தரும் பகவான் கிருஷ்ணனின் ஓவியம், அசாம் மாநில கலைக்கூடத்தில் ஒரு குழு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அகில இந்திய தேசபக்தி மன்றத்தின் அசாம் கிளை, கலை சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலைக் கண்டித்துள்ளது.