Precautions During Monsoon Season: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசுவதால், வடகிழக்கு பருவமழைக் காலம் தென்னிந்தியப் பகுதிகளில் வரும் அக். 15 மற்றும் 16ஆம் தேதிகள் அளவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காலத்தை விட வடகிழக்கு பருவக்காலத்தில்தான் தமிழ்நாடு அதிக மழைப்பொழிவை பெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தன. அதுமட்டுமின்றி வழக்கத்தை விட தமிழகத்திற்கு கூடுதல் மழை பொழியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த வட பருவமழை காலத்தை எதிர்கொள்ள அரசும், மக்களும் தயாராகி வருகின்றனர். அரசு பெரும் மழையை சமாளிக்க அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. 


சென்னை மக்களே அவசர உதவிக்கு '1913' அழையுங்கள்  


வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக சென்னை ரிப்பன் மாளிகையில்‘1913’ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இந்த கட்டுப்பாட்டு அறையில் தினசரி 4 ஷிப்ட் அடிப்படையில் 150 பணியாளர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்கி வருவதாகவும், மேலும், தண்ணீர் தேங்கினால் அதனை வெளியேற்ற 100-க்கும் அதிகமான மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தெரிவித்தார். 


மேலும் படிக்க | சென்னைக்கு ரெட் அலர்ட்... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையம் கனமழை வார்னிங்


மழைநீர் வடிகால் பாதைகளைச் சரிவர மூடி வைப்பது; மின்சார மாற்றிகளை சரியான முறையில் உயரத்தில் தூக்கி நிறுத்துவது போன்ற பணிகள், மழைக்கால தங்குமிடம், உணவு உட்பட அனைத்து நிவாரண வசதிகளும் உடனுக்குடன் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் ஆலோசனைகளை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகரின் முக்கிய மழைநீர் வடிகால் பகுதிகளில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கனமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்களே நோட் பண்ணுங்க


அரசு ஒருபக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்களும் தங்கள் சார்பில் வீடுகளில் உங்களுக்கு தேவையான விஷயங்களையும், மழை காலத்தில் பிரச்னை வராத வகையிலும் சில விஷயங்களை செய்துவைக்க வேண்டும். 


முக்கியமாக சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ள நாள்களில் அவசியமின்றி நீண்ட தூரம் பயணம் செல்வதோ, தேவையின்றி வெளியில் செல்வதையோ தவிர்த்துவிடுங்கள். அவசர உதவிகளை எண்களை நினைவில் வைத்துக்கொள்வதும் அவசியமாகும். சென்னையை பொறுத்தவரை 1913 என்ற அவசர உதவிக்கு 1913 என்ற எண்ணை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 


மழை காலத்தில் முன்கூட்டியே செய்ய வேண்டியவை


- கனமழை அடுத்த 5 நாள்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், குறைந்தது ஒரு வாரத்திற்கான குடிநீர் மற்றும் தேவையான உணவுகளை வீட்டில் சேமித்து வைக்கவும்.


- வீட்டில் முக்கியமான ஆவணங்கள், பொருள்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக உயரமான இடத்தில் சேமித்து வைக்கவும். 


- அதேபோல், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், பிரெட் பாக்கெட்டுகள், ஜாம் டப்பாக்கள், கொசுவர்த்தி, மருந்துகளையும் தேவையான அளவு வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.


- மொபைலில் மட்டுமின்றி டார்ச்லைட், பேட்டரி லைட்டுகள், பவர் பேங்க் ஆகியவற்றிலும் சார்ஜ் ஏற்றிவையுங்கள். 


- உங்கள் பகுதியின் அவசர உதவி எண்ணை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். முகாம்கள் எங்கு அமைக்கப்படுகின்றன என்பதையும் அதற்கு பாதுகாப்பாக செல்லும் வழியையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். 


- உங்களின் வீட்டில் செல்லப்பிராணிகள், கால்நடைகள் இருந்தால் அவற்றை கட்டிவைக்காமல் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 


- வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை தரும் செய்தி இணையதளங்கள், தொலைக்காட்சிகள், வானொலி, செய்தித்தாள்களில் வரும் தகவல்களையே நாடுங்கள். பதற்றமோ, அச்சமோ அடைய தேவையில்லை.   


மேலும் படிக்க | மதுரையில் பெய்த கன மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ