மனித முகத்தை ஒத்திருக்கும் ஆடு ஒன்றை அம்மாநிலத்தின் கிராம மக்கள் கடவுளின் அவதாரம் என கூறி வழிபட்டு வருகின்றனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ்ஜி பிரஜபாப். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றது. அதில், ஒரு ஆட்டுக்குட்டி மனித உருவில் இருந்தது அப்பகுதியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது.  இந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதியினர் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மனித முகத்தை ஒத்திருக்கும் இந்த ஆட்டுக்குட்டியை கடவுளின் அவதாரமாக வழிபடுவதாக அப்பகுதி கிராம மக்கள் கூறினர். 




இது குறித்து அறிவியலாளர்கள் கூறுகையில்.. ‘இது ‘சைக்ளோபியா’ என்று அழைக்கப்படும் ஒரு அரிய பிறவி குறைபாட்டால் ஏற்படுகிறது.  இதில் சாதாரண சூழ்நிலைகளில் முக சமச்சீர்மையை உருவாக்கும் மரபணுக்கள் தோல்வியடைகின்றன. பொதுவாக 16 ஆயிரம் விலங்குகளில் ஒரு விலங்கு இந்த குறைபாட்டுடன் பிறக்கிறது. மனிதர்களிலும் இந்த குறைபாடு மிக அரிதாக காணப்படுகிறது. 


இதேபோல் கடந்த மாதம் அர்ஜெண்டினா நாட்டில் மனித முகத்தைப் போன்று உருவம் உடைய கன்றுக்குட்டி பிறந்தது. ஆனால் ஒருசில மணி நேரங்களில் அது இறந்தது’ என கூறினார்.