Baba Vanga Prediction: பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசியான பாபா வாங்கா, எண்ணற்ற எதிர்காலத்தைக் கணிப்புகளை கூறி வைத்திருகிறார். பார்வை தெரியாவிட்டாலும், எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்பதை முன்கூட்டியே அவர் கணித்து குறிப்புகளாக எழுதிவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அவரின் பல கணிப்புகள் நிஜமாகியிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நடைபெறும் சில நிகழ்வுகள் குறித்தும் அவரின் 6 கணிப்புகள் இருக்கிறதாம். அதன்படி, 2 கணிப்புகள் இதுவரை நடந்திருக்கும் நிலையில் இன்னும் 4 கணிப்புகள் எஞ்சியிருக்கிறதாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிஜமான கணிப்பு


2022 ஆம் ஆண்டு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கடுமையான வெள்ளம் ஏற்படும் என அவருடைய கணிப்பில் இடம்பெற்றிருந்தது. அவருடைய கணிப்பில் கூறப்பட்டிருந்தது போலவே, ஆஸ்திரேலியாவில் வெள்ளம் ஏற்பட்டது. சில பகுதிகளில் வறட்சி ஏற்படும் என கூறியிருந்த நிலையில், ஐரோப்பாவின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, இத்தாலி 1950-களுக்குப் பிறகு மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. இந்த 2 கணிப்புகள் உண்மையாகிவிட்டன.


மேலும் படிக்க | புதன் ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், தொட்டது துலங்கும்


மற்ற நான்கு கணிப்புகள் என்னென்ன?


சைபீரியாவில் வைரஸ்


புவி வெப்பமயமாதலால் சைபீரியாவில் வைரஸ் ஒன்று உருவாகும். அது பெரிய அளவில் பரவும் என்று பாபா வாங்கா தன்னுடைய கணிப்பில் கூறியுள்ளார். 



வேற்றுகிரகவாசிகள் பூமியைத் தாக்குவார்கள்


2022 ஆம் ஆண்டில் 'ஓமுவாமுவா' என்ற சிறுகோள் பூமியில் உள்ள உயிரினங்களைத் தேட வேற்றுகிரகவாசிகளால் அனுப்பப்படும் என்றும், அதன் பிறகு இந்த வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ள மக்களைத் தாக்கக்கூடும் என்றும் பாபா வங்கா தனது கணிப்புகளில் கூறியுள்ளார்.


கேஜெட்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்படும்


கேஜெட்டுகளுக்கு முன்னால் மக்கள் செலவழிக்கும் நேரம் அதிகரிக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். இது மக்களின் மனநிலையை மோசமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவில் வெட்டுக்கிளி தாக்குதல்


2022-ல் இந்தியாவில் வெப்பநிலை உயரும். நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டும் என்று பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளார். வெப்பநிலை அதிகரிப்பால் வயலில் உள்ள பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கும் என்றும் பாபா வாங்காவின் கணிப்பு தெரிவிக்கிறது.


ஏற்கனவே 2 கணிப்புகள் நடைபெற்று இருக்கும் நிலையில், இந்த நான்கு கணிப்புகளும் நடைபெறுமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.


மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரியன்: யாருக்கு ஆபத்து, யாருக்கு ஆதாயம்? முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR