விமான நிலைய பணியாளர் பனி நேரத்தில் கழிப்பறையில் சுயஇன்பம் கண்டதால் பணிநீக்கம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் அனைவரும் அலுவலகத்தில் பணியில் உள்ள போது நீண்ட நேரம் வேலை பார்த்தால் சற்று களைப்பை நாம் அனைவரும் உணர்வது உண்டு. அப்போது நாம், அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து கொஞ்சம் இயற்கையான காற்றை சுவாசிப்பதும், நண்பர்களுடன் உரையாடுவது, தேநீர் குடிப்பது போன்ற சில ஓய்வெடுப்பது (பிரேக்) வழக்கம். இன்னும் சிலர் தங்களின் மன அழுத்தத்தை குறைக்க சுய இன்பம் காண்பது நல்ல தீர்வு என அறிவியல் ரீதியாகவும் நிரூபணமாகியுள்ளது. 


கனடாவில் உள்ள ஹாலிஃபக்ஸ் என்ற விமான நிலையத்தில், விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் விமான நிலைய கழிப்பறைக்கு சென்று சுயஇன்பம் அனுபவித்ததாக அவரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு செய்யும் போது அவரது பாத்ரூமில் இருந்து சத்தம் வந்துள்ளது. இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. பலர் அந்த ஊழியரின் செயல் குறித்து விவாதிக்க துவங்கினர். 


இந்நிலையில் அவரை பணியில் இருந்து நீக்க விமான நிறுவனம் உத்தரவிட்டது. இது குறித்து அந்நிறுவனம் கூறும்போது பணி நேரத்தில் இவ்வாறான செயல்களுக்கு அனுமதியில்லை அதனால் அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டோம் என விளக்கம் அளித்தது. 


மேலும் இந்த சுயஇன்ப சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர் கூறுகையில்; "நான் கழிப்பறையில் சுய இன்பம் அனுபவித்தது உண்மைதான். ஆனால் கழிப்பறையில் இருந்து நான் சத்தம் எழுப்பவில்லை. நான் எனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டே அதை செய்து கொண்டிருந்தேன். காதில் ஹெட்செட் மாட்டியிருப்பதாக நினைத்து பார்த்து கொண்டிருந்தேன். சத்தம் வெளியில் கேட்கிறது என்பதை நான் உணரவில்லை. இதற்காக என்னை பணியை விட்டு நீக்கியது பெரும் தவறு" என கூறினார்.